Header Ads



அபுதாபியில் சிலிண்டர் வெடித்து இலங்கையர் பலி, சடலத்தை விரைவில்தர மனைவி கண்ணீருடன் கோரிக்கை


திருமணமாகி மூன்று மாதங்களில் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அபுதாபி சென்ற நிலையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தமையிால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த மதுஷான் டி சில்வா என்ற 26 லயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டு வர உதவுமாறு உயிரிழந்தவரின் தாய் மற்றும் மனைவி கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் 24 வயதுடைய மனைவி கருத்து வெளியிடுகையில்,

“நாங்கள் திருமணம் செய்து 3 மாதங்களாகின்றd. கடந்த வருடம் நவம்பர் மாதம் 6ஆம் திகதி திருமணம் செய்தோம். வீட்டில் வருமானம் போதாமையினால் கணவர் வெளிநாடு சென்றார். கடந்த முதலாம் திகதி என்னிடம் வீடியோ அழைப்பில் பேசினார். நன்றாக பேசினார். இரவு வேலை என்பதனால் பகலில் உறங்குவதாக கூறினார்.

நான் மாலை அவருக்கு அழைப்பேற்படுத்தினேன். எனினும் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. இரவு அவரது நண்பர் அழைத்து, கணவருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் பின்னர் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. எங்களுக்கு எந்த தகவலும் கிடைவில்லை. பின்னர் ஒருவர் அழைத்து அவருக்கு சற்று வருத்தம் ஏற்பட்டுள்ளது. வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன் பின்னர் கணவரின் மாமாவின் மகள் ஒருவர் அபுதாபியில் உள்ளார். அவரிடம் கணவரை சென்று பார்க்குமாறு கூறினோம். கணவரை பார்க்க சென்றவர் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தார்.

கணவர் வெளிநாடு செல்லும் போதே பல தடைகள் ஏற்பட்டன. நாங்கள் யாரும் விரும்பவில்லை. செல்லும் வழியிலேயே அவரது வாகனம் உடைந்துவிட்டது. பின்னர் விமானத்தை தவற விட்டவர் வேறு விமானத்திலேயே சென்றார். தீ விபத்து ஒன்றில் உயிரிழந்ததாகவே முதலில் கூறப்பட்டது.

எனினும் எரிவாயு சிலிண்டர் வெடித்தே அவர் உயிரிழந்தார் என பின்னரே தெரியவந்தது. அவரது சடலத்தை முடிந்த அளவு விரைவில் கொண்டுவந்து தாருங்கள்” என மனைவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. மிகவும் கவலையாக செய்தி. இது போன்ற செய்திகளை நாம் கேட்கக் கூடாது.அந்த அப்பாவிப் பெண்ணுக்கு அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டும். இறந்த அடியானை அல்லாஹ் பொருந்திக் கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

    ReplyDelete
  2. Very Sad News. May Almighty Allah Bless her family.

    ReplyDelete

Powered by Blogger.