Header Ads



நாம் அரசியலை தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும்..?

(எம்.என்.எம்.அப்ராஸ்)

சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்களின் அறிமுக விழா மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது

இவ்விழாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யூ.எம்.அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில், 

உலகில் சட்டத்துறை , நிர்வாகத்துறைநீதித்துறைக்கு அப்பால் அடுத்தது ஊடகத்துறையே செல்வாக்கு மிக்கதாய் காணப்படுகின்றது. அன்று இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதலில் பின்னர் ஊடகங்கள் நடந்த முறை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாததாய் காணப்பட்டது
என்பதை சுட்டிக்காட்டினார்

மேலும் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் அனைவரும் இலங்கையர் 
என்ற அடிப்படையில் ஒன்றினைய வேண்டும் .நாங்கள் நாட்டுப்பற்று உள்ளவராக மாற வேண்டும் அப்போது தான் எமது நாட்டை வளம் மிக்கதாய் கட்டியெழுப்ப முடியும்.

நாம் அரசியலை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் 
எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப
முடியும்? அன்று மலேசியாவை மகாதீர் முகம்மது ,சிங்கப்பூரை 
லீ குவான் யூ ,தென் கொரியாவை ஜெனரல் பார்க் போன்றதலைவர்கள் எவ்வாறு தனது நாட்டை சிறந்த முறையில் கட்டியேழுபினார்கள்.
அதே போன்ற தலைவர் தான் கோடடாபய ராஜபக்ஷ என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 

ஜனாதிபதியாக கோடடாபய 
வந்தவுடனயே முதலில் எந்த அரச திணைக்களங்களிலும் எனது புகைப்படத்தை வைக்க வேண்டாமெனச் சொன்னார். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்த இரண்டாயிரம் பேரை இருநூறுராகக் குறைத்தார். வாகனப் பேரணியை இல்லாமல் செய்தார். 
சொகுசான வீடுகளை நிராகரித்தார்.
ஆடம்பரத்தை விரும்பாத ஒர் ஜனாதிபதி என்றால், அது எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தான். 

அன்று யுத்ததை வைத்து சிலர் உழைத்தனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் யுத்தம் முடிவுக்கும் கொண்டு வரப்பட்ட பின்னர் நாட்டில் நிம்மதியான சமாதானமான வாழ்வு உண்டானது .மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி அடைந்தது. என்றார்.

மேலும் இதில் காலம்சென்ற
சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவரகளுக்கு இரண்டு நிமிடங்கள் பிராத்தனை இடம்பெற்றமை குறிப்பிட்டத்தக்கது

No comments

Powered by Blogger.