Header Ads



ஐ.தே.க விக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்து தேர்தலுக்கு முகம்கொடுப்போம்: சின்னம் எதுவானாலும் பிரச்சினையில்லை

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்போம். சின்னம் எதுவாக இருந்தாலும் பிரச்சினையில்லை என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் இருக்கும் அரசியல் நிலைவரங்களின் பிரகாரம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கைச்சின்னத்திலா, கதிரை சின்னத்திலா அல்லது மொட்டு சின்னத்திலா போட்டியிடப்போகின்றது என பெரும்பாலானவர்களால் கேட்கப்பட்டு வருகின்றது. எம்மை பொறுத்தவரை எதிர்வரும் தேர்தலில் விரிந்த கூட்டணி அமைத்துக்கொண்டு போட்டியிடவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றோம். சின்னம் தொடர்பில் அலட்டிக்கொள்ளவில்லை.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியுடனும் பொதுஜன பெரமுனவுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றது. அதனால் சின்னம் எதுவாக இருந்தாலும் எமக்கு பிரச்சினையில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கு விராேதமான அனைத்து அரசியல் கட்சிகளையும்  ஒன்றிணைத்துக்கொண்டு விரிந்த கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவதே எமது நோக்கமாகும்.

குறிப்பாக எதிர்வரும் தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடவேண்டும் என பசில் ராஜபக்ஷ் தெரிவித்திருக்கின்றார். அது தொடர்பில் அவருக்கு நான் நன்றி கூறுகின்றேன். சின்னம் தொடர்பில் யாரும் பிரச்சினைப்பட தேவையில்லை.  நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கிராமங்களில் அரசியல் செய்யும் சூழலை ஏற்படுத்த, மேல் மட்ட அரசியல் தலைவர்களால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ஷ் சிறந்த தலைவர் என்றவகையில், இந்த நாட்டை ஒழுக்கமுள்ள நாடொன்றாக மாற்றியமைக்க தேவையான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவர் மிகவும் வரவேட்கத்தக்க வகையில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். அதன் முன்மாதிரியை நாங்களும் கடைப்பிக்கவேண்டும். அதன் பிரகாரம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நானும் சுவராெட்டிகள் அடிக்கமாட்டேன்.

மேலும் ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்து சில் மாதங்களே ஆகின்றன. அந்த காலப்பகுதியில் மக்களுக்கு பாரிய நிவாரணங்களை வழங்கி இருக்கின்றார். விவசாயிகளை ஊகுவித்து அவர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பொன்றை பெற்றுக்கொடுக்கும் வகையில் நாட்டில் உட்பத்தி செய்யும் தானிய வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடைவிதித்திருக்கின்றார்.

எனவே எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் உறுதியான அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு தேவையான பல நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.