Header Ads



பொதுஜன பெரமுனவில் போட்டியிடுபவர்களை தோற்கடிக்க திட்டமா...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வலுப்படுத்த ஆதரவளித்து கட்சியை பாதுகாக்க எடுக்கக் கூடிய சிறந்த அரசியல் நடவடிக்கையாக இருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் தலா ஒருவருக்கு மாத்திரம் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை வழங்குவது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இவர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட வேட்புமனுக்களை வழங்கினாலும் அவர்கள் அனைவரையும் தோற்கடிக்கும் திட்டங்கள் இருப்பதாகவும் சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்டால் குறைந்தது 15 ஆசனங்களை கைப்பற்றி அடுத்த நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கும் சக்தியாக மாற முடியும் எனவும் அவர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டால் நிச்சயமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழியும் எனவும் அந்த சாபத்தில் கை வைக்க வேண்டாம் எனவும் தொகுதி அமைப்பாளர்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே பொதுத் தேர்தலில் போட்டியிடும் கூட்டணியின் வேட்மனுக்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 30 சத வீதமும் கூட்டணியின் இணைத்தலைமைத்துவமும் வழங்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டணியாக முன்நோக்கி செல்ல ஜனாதிபதித் தேர்தலின் போது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் சம்பந்தமாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எடுப்பார்கள் என ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.



1 comment:

  1. S-SELFISH LEADER MY 3
    L-LUNATIC LEADER MY
    F-FUTURE LESS HEAD LESS PARTY
    P-POOR GENUINE SUPPORTERS ARE TAKEN FOR GRANTED BY 3

    ReplyDelete

Powered by Blogger.