February 09, 2020

இனி இந்த நாட்டின் முஸ்லிம்களுடைய தேசிய தலைவர் பசீர்சேவூதாத்தான்

இந்த நாட்டிலே கடந்த காலத்தில் முஸ்லிம் தலைவர்கள், முஸ்லிம்களை ஏமாற்றிய மாதிரி தமிழ் மக்களை இரா.சம்மந்தன் ஏமாற்றி வருகின்றார். எனவே இனி இந்த நாட்டின் முஸ்லிம்களுடைய தேசிய தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர்சேவூதாத்தான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன் திருட்டுப் பிரச்சினை குறைவடைந்துள்ளதையடுத்து ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் காத்தான்குடி பூநொச்சிமுனை மீனவர் சங்கத்தின் தலைவர் யூ.எச்.முகைதீன் பாவா தலைமையில் பூநொச்சிமுனை மீனவர் சங்க கட்டிடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் தொகுதி அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருடப்பட்டு வருவதாக எனது கவனத்திற்கு கடந்த மாதம் மீனவர்கள் கொண்டு வந்தனர். இதனையடுத்து உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.

இதன் பிரகாரம் உடனடி நடவடிக்கை காரணமாக 50 வீதமான இந்த மீன் திருட்டு தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு கடந்த 5 வருடங்களாக இன்று மூவின மக்களும் பவல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதார தொழிலான மீன் பிடி தொழிலை செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனைக்கு கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் றவூப் ஹக்கீம் , முன்னாள் அமைச்சர் றிசாட் பதூர்தீன் முஸ்லிம்களுடைய தேவைகள் பிரச்சனைகள் இருந்தும் அது தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் ஆட்சியில் எந்த திருடர்களுக்கும் இடமில்லை என ஜனாதிபதி தெரிவித்த அடிப்படையில் எந்த திருடர்களுக்கும் இனி எந்த உறுதுனையும் கொடுக்க மாட்டோம். அதேவேளை இன்று ஜனாதிபதியின் ஆட்சியை எல்லா மக்களும் விரும்புகின்றனர்.

எனவே ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்றதையடுத்து அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள் மூலமாக மீன் திருட்டு செயற்பாடுகள் தற்போது குறைவடைந்துள்ளது. எனவே பயப்பிடாது நீங்கள் ஆழ்கடல் மீன் பிடியை மேற்கொள்ளவும் என அவர் தெரிவித்தார்.

இதன்போது மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட முன்னாள் நகர சபை உறுப்பனரும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.சியாட் ஆழ்கடலில் மீன் திருட்டுப் பிரச்சினை தொடர்பாக, ஜனாதிபதி, பிரதமர் கவனத்திற்கு கொண்டு வந்து எடுத்துள்ளமைக்கு ஆழ்கடல் மீனவர்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

14 கருத்துரைகள்:

"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள்,

அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு

தொழுகையைக் கடைப்பிடித்து

ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து

அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் -

இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்".

(அல்குர்ஆன் : 9:18)
www.tamililquran.com

இதுதான் முஸ்லிம்களின் அனைத்துத் தலைமைத்துவங்களுக்கும் அடிப்படைத் தகைமை அளவுகோல்.

முஸ்லிம்களை நிர்வகிக்க எவர் விரும்பினாலும் அவர் இத்தகுதிகளை வளர்த்துக்கொள்ளட்டும்.

எந்தவொரு வேட்பாளருக்கும் இது பொருந்தும்.

இனிவரும் காலங்களில் முஸ்லிம்கள் இத்தகுதி கொண்டோரைத் தெரிவு செய்து தம் அமானிதங்களை சரியாக நிறைவேற்றிய திருப்தியை அடைவார்களாக.

மனநோயாளி!

இந்த அநியாயத்தை எங்கு போய் சொல்வது ?

எப்படி தலைவராகலாம்! தலையில் முடி இல்லையே? Mr சியாட்டுக்கு ஒட்ட சொல்லுங்க!

தோழர் பசீர் சேகுதாவுத் ஒருபோதும் சம்பந்தரை இழிவுபடுத்தியதில்லை. தமிழர் முஸ்லிம்கள் உறவை தன் வாழ்நாள் கனவாக கொண்டிருக்கும் உங்கள் தலைவர் தோழர் பசீர்கூட ஒருபோதும் முஸ்லிம்களது நண்பரான சம்பந்தருக்கு தரவேண்டிய மதிப்பை தர தவறியதில்லை. சென்ற மாகாணசபை தேர்தலில் முஸ்லிம்களை அங்கீகரித்து கிழக்கு மாகாண முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது தொடர்பாக மட்டும் தமிழர்கள் மத்தியில் சம்பந்தர் தமிழரை ஏமாற்றி விட்டார் என விமர்சனம் இருக்கு. நீங்களும் ஏன் அதையே சொல்கிறீங்க. ஏன் கிழக்கில் சம்பந்தரை எதிர்த்து அரசியல் செய்யும் திரு.பிள்ளையான் திரு.கருணா அம்மான்கூட சம்பந்தரை இப்படி இழிவு செய்ததாக நினைவில்லை. ஏன் நீங்கள் சம்பந்தமில்லாமல் வலிந்து தமிழ் மக்களை சம்பந்தன் ஏமாற்றுகிறார் என்கிற பொய்யை சொல்கிறீங்க. கொஞ்சம் அரசியல் நாகரீகதைக் கற்றுக்கொள்ளுங்க. படியுங்க சம்பந்தன் இல்லாவிட்டால் 2019
இன பேரழிவுக்குப் பிறகு பிழவுபட்டு தேசிய கட்சிகளின் பின் சரணடைந்திருப்பார்கள். இன்று சர்வ தேச அழுத்தங்களூடாக நாம் மேலும் பலபட்டே உள்ளார்கள்.

Paarra.....Is it beginning of Fascism???

இதைக் கேட்டதும் சிரிப்பதா அல்லது அழுவதா

தலைவர் அவதெல்லாம் இருக்கட்டும் முடிந்தால் மக்களின் வாக்கினால் பாராளுமன்ற உறுப்பினராக சொல்லுங்க!

Dear Mr. J.Balan, Don't worry about ignorant people. we know the real weight of senior politicians no?

ஜோக்கர்ஸ்

HOPE BASHEER WILL NOT GET A HEART ATTACK AFTER HEARING THIS NEWS.

Post a comment