Header Ads



ஐக்கிய தேசிய கட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்பொவதில்லை.

(ஆர்.விதுஷா)

ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட மார்ஷல் சரத் பொன்சேகாவையம் தன்னையும் ஐக்கியதேசிய கட்சியின்  செயற்குழுவிலிருந்து நீக்கவில்லை என தெரிவித்த களுத்துறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்அஜித் பீ. பெரேரா ஐக்கிய தேசிய  கட்சி தலைமையிலான கூட்டணியின்  சின்னமாக யானை சின்னத்தை பெற்றுக்கொள்ள தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.



எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும்  கூறியதாவது  ,

ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணியின் தலைவர் பதவி, பிரதமர் வேட்பாளர் பதவி,வேட்பாளர் தெரிவு  குழுவின் தலைவர் பதவி மற்றும் ,கூட்டணியின் செயலாளரை  தெரிவு செய்யும் உரிமை ஆகிய அனைத்து அதிகாரங்களும் சஜித் பிரேமதாசவிற்கு  உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ,சஜித் பிரேமதாச கூட்டணியின் பொது செயலாளராக  ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமித்துள்ளார். அதற்கு செயற்குழுவில்  ஏகமனதாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அந்த வகையில் யானை சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம். ஆயினும்  அது தொடர்பில்  உரிய பதில் கிடைக்கப்பெறவில்லை.

அத்துடன், கூட்டணியில் போட்டியிடுகின்றோம் என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்பொவதில்லை.

நாம் ஐக்கியதேசிய கட்சியை சேர்ந்தவர்கள் ஆயினும் ,கூட்டணி ஐக்கியதேசிய கட்சியை விடவும் பெரிய வியூகத்தை  கொண்டதாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.