Header Ads



வசீம் தாஜூடீன் வழக்கு மார்ச் 26 க்கு ஒத்திவைப்பு

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பான வழக்கை கொழும்பு மேலதிக நீதவான் ஷலனி பெரேரா இன்று 20 எதிர்வரும் மார்ச் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக 500 தொலைபேசி அழைப்புகள் சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோர் சுகவீனம் காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

1 comment:

  1. தோண்டியெடுக்கப்பட்ட இந்த ஜனாஸா வழக்கு ஐந்து வருடங்கள் கடந்து இப்போது ஆறாவது வருடத்தை கடக்கிறது.
    என்னதான் நீதித்துறையோ படிப்போ தெறியாது.
    தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்கிற சட்ட அமுதவாக்கை மீறியே நம் நீதிதுறை இயங்குகிறது.
    நீதித்துறை என்பது இறைவனை நம்பி அவனுக்கு செய்யவேண்டிய காணிக்கை மட்டுமல்ல, இறைவனோடு மோதும் துறையும் இதுதான்.

    اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏ 
    தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
    (அல்குர்ஆன் : 95:8)

    ReplyDelete

Powered by Blogger.