Header Ads



ஈரானுக்கு ஆதரவாக சீனா, அமெரிக்காவின் 'ஆபத்தான நடத்தை' அபாயகரமானது என எச்சரிக்கை

ஈராக்கில் ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 'ஆபத்தான நடத்தை' குறித்து சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிப்பதற்காக சீனா அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் ‘ஆபத்தான நடத்தை’ அபாயகரமானது என்று எச்சரித்துள்ளது.

சுலைமானியின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக ஈரான் பகிரங்கமாக உறுதிமொழி எடுத்துள்ளது.

அதே சமயம், அமெரிக்க சொத்துக்கள் அல்லது குடிமக்களுக்கு எதிரான ஈரானிய தாக்குதல்களுக்கு மேலும் பதிலடி கொடுக்கப்டும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

அதிகார அரசியல் பிரபலமானது மற்றும் நிலையானது அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறினார்.

சமீபத்திய நாட்களில் அமெரிக்காவின் ஆபத்தான இராணுவ நடத்தை சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளுக்கு எதிரானது.

அமெரிக்கா தனது சக்தியை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்ப்பதற்கு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முறையிடுகிறோம்.

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நிலைப்பாடு குறித்து சீனா ‘மிகுந்த அக்கறை கொண்டுள்ளது’ என்றும் ஜெங் ஷுவாங் கூறினார்.

அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஈராக் நாடாளுமன்றம் தீர்மானித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கிற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியதையும் சீனா விமர்சித்துள்ளது.

பொருளாதாரத் தடைகளை பயன்படுத்தி அச்சுத்துவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்று ஜெங் ஷுவாங் கூறினார்.

சம்பந்தப்பட்ட நாடுகள், குறிப்பாக பிராந்தியத்திற்கு வெளியே உள்ள முக்கிய நாடுகள், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பிராந்திய பதட்டங்களை அதிகரிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர்ப்பதற்கும் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக ஜெங் ஷுவாங் கூறினார்.

No comments

Powered by Blogger.