Header Ads



அமெரிக்கா - ஈரான் போர் ஆரம்பமாகவிட்டதா..? வெற்றியடையப் போவது யார்..??


அமெரிக்கா-ஈரான் இடையே போர் முற்றும் நிலையில், இரு நாடுகளிடம் இருக்கும் இராணுவ பலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் தளபதி குவாசிம் சுலைமான் அமெரிக்க படையினரால் கொலை செய்யப்பட்டதால், ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ளது.

இதனால் அமெரிக்காவை பழிக்கு பழி வாங்குவோம் என்று ஈரான் சூளூரைத்துள்ளது. அதுமட்டுமின்றி இராணுவத்தினர் எப்போதும் ஆயத்தமாக இருக்கும் படி ஈரான் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்காவும் தன்னுடைய இராணுவத்தினரை எச்சரிக்கையாக இருக்கும் படி தெரிவித்துள்ளதால், இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் நேற்று முதல் மூன்றாம் உலகப்போர் என்ற ஹெஷ்டேக் தொடர்ந்து முதல் இடத்தில் டிரண்டாகி வரும் நிலையில், உலக நாடுகளின் இராணுவ தரவரிசையை வெளியிடும் குளோபல் பயர், 137 நாடுகளில் அமெரிக்கா மிகவும் உறுதியான இராணுவ அமைப்பபை பெற்று முதல் இடத்தில் இருப்பதாகவும், அதே சமயம் ஈரான் 14-வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் இராணுவ தரவரிசையில் பின் தங்கியிருந்தாலும், , ஈரானின் பிராந்திய மற்றும் நட்பு நாடுகள் வலுவான இராணுவ பலத்தை பெற்றுள்ளதால், இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஆயுதத் தடை மற்றும் ஐ.நா. ஆயுதக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால், ஈரான்உள்நாட்டு ஆயுத உற்பத்தியை நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

ஈரான் இராணுவ பலம்

ஈரானை பொறுத்த வரை மொத்த இராணுவ வீரர்கள் 47,324,105 கோடி பேர் எனவும் இதில் 523,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் கடற்படை, வான்படை IRGC-யும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 6.3 பில்லியன் டொலர் (4.8 பில்லியன் டாலர்) எனவும் இது 8,577 போர் டேங்குகளை கொண்டுள்ளது.

அதே போன்று ராக்கெட்டுகள், சுயமாக இயக்கப்படும் பீரங்கிகள், கவச சண்டை வாகனங்கள் மற்றும் இழுக்கப்பட்ட பீரங்கிகள் ஆகியவற்றையும் ஈரான் வைத்துள்ளது.

அனைத்து விமான கைவினைப்பொருட்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உட்பட விமான தாக்குதல் நடத்துவதற்கு 512 உள்ளதாகவும், 398 கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் கப்பல்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானை பொறுத்தவரை தற்போது 12 முக்கிய ஏவுகணைகள் உள்ளன, அவை பெரும்பாலும் குறுகிய தூர மற்றும் நடுத்தர தூரத்தில் தாக்க கூடிய சக்தி கொண்டவை. இவை மிகவும் ஆபத்தான ஏவுகணைகள் என்ற அச்சுறுத்தலும் உள்ளது.

அமெரிக்க இராணுவ பலம்

உலகின் வலிமையான இராணுவத்தை அமெரிக்கா கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிடம் ஒப்பிடும் போது, அமெரிக்கா 1,281,900 இராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அதன் மொத்த இராணுவ வீரர்கள் 144,872,845 பேர் என்பதால், ஈரானுடன் ஒப்பிடும் அமெரிக்கா சற்று அதிக வீரர்களையே கொண்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் 716 பில்லியன் டொலர் எனவும் அமெரிக்கா ஈரானை விட குறைவான ஏவுகணைகளைக்(7 ஏவுகணைகள்) கொண்டிருந்தாலும் அவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மிகவும் அதி நவீன சக்தி வாய்ந்தவை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் அணு ஆயுதங்களில் வைத்திருப்பதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் 90 சதவீதத்திற்கு மேலாக வைத்துள்ளன. இரு நாடுகளும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையைக் கொண்டுள்ளன

உலகில் மிகப் பெரிய வான் மற்றும் கடற்படைகளை அமெரிக்கா கொண்டுள்ளது. அமெரிக்கா 48,422 போர் டேங்குகள், ராக்கெட்டுகள், சுய இயக்கப்படும் பீரங்கிகள், கவச சண்டை வாகனங்கள் மற்றும் கயிறு பீரங்கிகள் மற்றும் 415 கடற்படைகளையும் கொண்டுள்ளது.


No comments

Powered by Blogger.