January 16, 2020

முஸ்லிம்கள் தம்மைத் தேசத் துரோகிகளாகச் சித்தரிக்காது ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும் விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும்


ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், முஸ்லிம்கள் மிகச் சாதுர்யமாக நடந்துகொண்டு, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது முழு அளவிலான ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

  கொலன்னாவ மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று, அண்மையில் கொலன்னாவ வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  கெளரவ அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

   இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத், பிவிதுரு ஹெல உறுமயத் தலைவர் உதய கம்மன்பில, கொலன்னாவ ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஹனீப் ஹாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பைஸர் முஸ்தபா எம்.பி. தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, 

   எம்மை முன்னோக்கி பொதுத் தேர்தல் ஒன்று வருகிறது. இத்தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது ஆளுமையை வெளிக்காட்ட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் நடந்துகொண்டது போல் செயற்படக் கூடாது. முஸ்லிம் சமூகம் தமது சமூகப் பிரச்சினைகளை அணுகுவதில் உணர்ச்சி பூர்வமாக அன்றி உணர்வு பூர்வமாக இத்தருணத்தில் சிந்தித்து செயற்படுவது அவசியம். அத்துடன், இலங்கை நாட்டில் ஏனைய சமூகங்களின் உள்ளங்களை வெல்வதன் மூலம், எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் அவசியமாகும். 

   ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று பிரசாரம் மேற்கொண்டவர்கள், இன்று தோற்றுப்போய் விட்டனர். இதேபோல், எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்பு முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று முஸ்லிம், தமிழ் சமூகங்களை அச்சமிக்க மன நிலையில் வைத்து அரசியல் செய்ய முற்படுகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தற்போது முஸ்லிம் சமூகத்தைக் கைவிட்டுள்ளனர். இனிமேல் அவர்களிடம் போய், எமக்கு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, முஸ்லிம்கள் இவ்வாறான தலைவர்களின்  அரசியலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். 

   முஸ்லிம்கள், ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அவர் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார். ஜனாதிபதி  சிறந்ததோர் நிர்வாகி. அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்வதை விட, ஒரு சிறந்த ஆளுமை மிக்க நிர்வாகியாகக் காட்டிக்கொள்ள விரும்புபவர். தற்போது ஜனாதிபதியினால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைத் திட்டங்கள் மிகவும் கச்சிதமாகவும் நுணுக்கமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

   எனவே, இனிமேலும் முஸ்லிம் சமூகம், தம்மைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்துக் கொள்ளாமல், ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் விசுவாசமானவர்களாக நடந்துகொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் சுயநல அரசியல் சமூகத்தைப் பின்னடையச் செய்துள்ள நிலையில், முஸ்லிம்களையும் முஸ்லிம் இளைஞர்களையும் நேரான வழியில் வழி நடத்த வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

3 கருத்துரைகள்:

தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிப்பது தேசத்துரோகம் என எந்த சட்டத்தில் உள்ளது.சட்டத்திற்கு முரணான பேச்சு.

(முஸ்லிம் அரசியல் கட்சிகள் தம்மை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்கான ஆலோசனைகள்) எமது அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றம் கொண்டுவரப்படுவதற்கான தேவை தற்காலத்தில் எழுந்துள்ளது எனலாம் .அதற்கான காரணங்களாக பின்வருவனவற்றை இனங்காணலாம். 1.முஸ்லிம் அரசியல் கட்சிகள் சமூக இயக்கங்களாக தொழிற்படாமல் தேர்தல் காலம் அல்லாத நிலையில் மக்களை விட்டும் தூரம் விலகி நிற்கின்றமை 2.இளைஞர்களிடையே சமூக அரசியல் இலக்குகள் பற்றிய தெளிவின்மையும் ஆரம்ப காலத்தில்(அஸ்ரப் என்ற ஞானி காலத்தில்) இருந்தது போன்று விழிப்பூட்டல்கள் இன்மையும் 3.முஸ்லிம் அரசியலில் முஸ்லிம்களின் சமயம் வெறுக்கின்ற விடயங்கள்(இசை,பட்டாசு,ஆடம்பரம்)உட்புகுந்தமை 4.தொன்ணூராம் ஆண்டிற்குப்பிறகு பிறந்த அதிகமான இளைஞர்களுக்கு சமூக அரசியலின் தேவை அல்லது சீரியஸ் புரியப்படாமை இவற்றை சீர்செய்ய பின்வரும் வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்பட வேண்டும். 1.இளைஞர்களுக்கு சமூக அரசியல் இலக்குகள் வரலாறுகள் விழுமியங்கள் தொடர்பில் தொடர்ச்சியான அறிவூட்டல் வழங்கப்படல் வேண்டும். 2.சமூகத் தேவைகள் என்ன அவற்றை அடைவதற்கான வழிகள் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வூட்டல் மேற்கொள்ளப்படல் 3. அரசியல் கட்சிகளோடு இணைந்துள்ள இளைஞர்களின் தகவல் திரட்டினை கொண்டிருத்தலும் சமூகத் தேவைகள், இடர்களின் போதும் இலகுவாக அவர்களை ஒண்றிணைக்ககூடியதாகவும் இருத்தல்.4 .முஸ்லிம் அரசியலில் இணைந்துள்ள பட்டாசு இசை என்பவற்றை இல்லாதொழிக்க தீர்கமான தீர்மானமொன்றை எடுத்தலும் தொழு கையில் உறுதியாய் இருக்க ஒவ்வொரு சபையின் இறுதியிலும் வலியுறுத்தலும்.(தொழுகையின்றி முஸ்லிம்,முஸ்லிம் சமூகம் என்று பேசுவதற்கான அருகதை இல்லை)5.மாத த்தில் ஒரு முறை இளைஞர்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் . அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் மட்டும் சமூகம் பற்றி பேசுவதாகவும் பின்னர் தொடர்பில்லாதிருக்கும் நிலை மாறி ஒரு சமூக இயக்கமாக தொடர்ந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செய்கின்ற போது சமூக இயங்கியல் சிறப்பாக இடம்பெறுவதுடன் அவ்வப்போது எழுகின்ற சமூகத்திற்கெதிரான சட்ட ரீதியான அரசியல் ரீதியான, பொருளார ரீதியான சவால்களினை இலகுவாக வெற்றி கொள்ள முடியுமாகவும் இருக்கும்.ஒரு தனிமனிதனால் அவன் நிறுவனத்தினால்
ஒரு சமூகத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளையும் ஏனைய தேவைகளையும் நிறைவேற்ற முடியுமானால் ஏன் சமூகத்தின் பெயரால் கட்சி நடத்தும் எம்மால் மக்கள் சக்தியை ஒன்றிணைத்து சமூகத்தை பொருளாதார ரீதியாக வளப்படுத்தி அச்சமூகத்திற்கு வரும் சவால்களை முறியடிக்க முடியாது.முஸ்லிம் அரசியல் சீர்திருதத்தை ஒவ்வொரு கட்சியும் தம் முள்ளே செய்து இஸ்லாத்திற்கு வெறுப்பானவைகளைக் களைந்தால் நிச்சயம் இறைவனின் உதவி கிடைக்கும் அதனூடே சமூக முன்னேற்றத்தை அடையலாம்.கட்சிகள் விரைவாக தம்முள் மேற்கூறிய அரசியல் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்துவது மிக அவசியமும் காலத்தின் தேவையுமாகும்(ஏ.எம்.ஆரிப்,நிந்தவூர்)

Then, what about the Majorities of Sinhalese and Christians who voted Sajith...., JVP, and others....
So, they are also traitors....!!!

Come on Mr. Mustafa, The voters who voted against Mr. Gotapaya (Current President), not against to the law and order. Just they voted to whome they liked and wished. Its not mean they are all against to the country...
Its their full right to chose and vote for anyone....

The frame was created by your parties not UNP or others....

Please return to the Terror medias, your all-in-all party members and news flashed... The person who is at the podium front of you & other co-fireinds....why you didnt ask them about his terror speaches and torture against muslims during the election....!!!!!!!
Each citizen has freedom to vote & chose anyone...and they may against to UNP and other in next election.....Its all about political conclusion and confusion....nothing else

Post a Comment