Header Ads



இந்த தாக்குதல் ஆரம்பம் மட்டும்தான், அமெரிக்காவை ஆட வேண்டாமென்கிறது ஈரான்

அமெரிக்க படைகளுக்கு எதிராக இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆரம்ப நடவடிக்கை தான், ஆட்டம் வேண்டாம் என்று ஈரான் நாட்டின் மூத்த இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

ஈராக்கில் இரண்டு இடங்களில் இருக்கும் அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் 80 பேர் பலியாகியிருப்பதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அதைப் பற்றி இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஈரான் நாட்டின் மூத்த இராணுவ தளபதி Mohammad Kosari, இது ஆரம்பம் தான், டிரம்ப் சட்டவிரோதமான செயல்களை நிறுத்தும் படி அமெரிக்க அதிகாரிகள் கூறுங்கள், இல்லையென்றால் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க படைகள் மேலும் பாதிக்கப்படும் என்று Mohammad Kosari எச்சரித்துள்ளார்.

குவாசிம் சுலைமானியின் மரணத்தால், ஈரான் நாட்டின் முக்கிய இராணுவ புள்ளிகள் மற்றும் தலைவர்கள் அமெரிக்காவை பழி வாங்க வேண்டும், டிரம்பிற்கு வலியை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.