Header Ads



ஐ.தே.கவிற்கு செய்த அநீதிக்காக, கடவுள் கொடுத்த தண்டனை

(ஆர்.விதுஷா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைமை மிகவும் கவலை அழிப்பதாக தெரிவித்த கொழும்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம். மரிக்கார்  நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு சுதந்திர கட்சி  செய்த அநீதிக்கான சாபமாகவே இதனை கருத முடிகிறது எனவும்  குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில்  இன்று -21- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர்  மேலும் கூறியதாவது  ,  

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நிலை கவலையளிக்கின்றது. ஏனெனில் நல்லாட்சி அராசங்கத்தில்   அவர்கள் இணைந்திருந்த போது அனைத்து சலுகைகளும்  அவர்களுக்கு வழங்கப்பட்டன.

எமது ஆதரவாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள்  அனைத்தும் சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களுக்கே கிடைத்தது.   தமக்கு ஏற்ற வகையில் சுதந்திரமான செயற்பட்டனர்.

பின்னர்  ஐ.தே.க வை விட்டு விலகி சென்றனர்.  

தற்போது ,தம்மை மொட்டு கட்சியினர் கவனத்தில் கொள்வதில்லை.   தமது கருத்திற்கு மதிப்பளிக்கின்றார்கள் இல்லை என்று சுதந்திர  கட்சியினர் புலம்புகின்றனர். ஐ.தே.கவிற்கு அவர்கள் செய்த  அநீதிக்காக கடவுள் அவர்களுக்கு கொடுத்துள்ள தண்டனையே  இத்தகைய நிலைமையாகும்.  

அவர்களுடைய கட்சியின் சார்பில் மனுத்தாக்கல் செய்வதற்கான  வாய்ப்புக்களும் இழக்கப்பட்டுள்ளன. அப்பாவி ஐ.தே.க  ஆதரவாளர்களுக்கு செய்த அநீதியான செயற்பாடுகளுகளின் சாபமே அவர்களுக்கு  இத்தகைய நிலைமை ஏற்பட்டுத்தியுள்ளது.

பொற்றோலிய  கூட்டுத்தாபனத்தில் ஐ.தே. க.  ஆதரவாளர்களுக்கு  எந்த தொழில் வாய்ப்பும் வழங்கப்படவில்லை. மாறாக சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டன.   

ஐ.தே.க . ஆதரவாளர்கள் வாக்களித்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு  ஆட்சி அதிகாரத்தை வழங்கினர். ஆயினும் அவர்களுக்கு அனைத்து  துறையிலும் சலுகைகள் மறுக்கப்பட்டன.  

இந்நிலையில் தற்போது மொட்டுக்கட்சியில் இணைந்து கொண்டு  எமக்கு எதிரான கருத்துக்ளை முன்வைக்கின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மனநிலையில் மொட்டு கட்சியினர் இல்லை. மொட்டுக்கட்சியினரிடத்தில் இத்தகைய நாடகங்கள் பலிக்காது. இதனை நினைவில் கொள்ள வேண்டும் என  சுதந்திரக்கட்சியினரிடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. ஒன்று கிட்டப் போனால் துர்நாற்றம்,மற்றது கிண்டிப்பார்த்தால் நாற்றம்.எனவே இரண்டு கட்சிகளும் ஒரே இனம்தான். அதில் மேலோட்டமான தோற்றத்தில் அல்லது பார்வையில் வித்தியாசம் மட்டும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.