Header Ads



இன்றுமுதல் இரத்தாகவுள்ள வரிகள்

வருமானம் பெறும் போது செலுத்த வேண்டியிருந்த வரி மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி ஆகியன இன்றுமுதல்  (01) இரத்து செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. 

முன்னர் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் மேல் வருமானம் பெறும் நபருக்கு வரி செலுத்த வேண்டியேற்றபட்டதுடன் அந்த வரியை இனிமேல் செலுத்த வேண்டியதில்லை என அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது. 

எனினும் மாதம் ஒன்றுக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் மேல் வருமானமாக பெறுவோர் வரி செலுத்த வேண்டும். 

இதேவேளை சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி மீது இதுவரை விதிக்கப்பட்ட நூற்றுக்கு 5 வீத வரி அதாவது நிறுத்தி வைக்கும் வரியும் நாளை முதல் இரத்துச் செய்யப்படவுள்ளது. 

அத்துடன் ஒன்றிணைக்கப்பட்ட வரி எனப்படும் வெட் வரி, வியாபார நடவடிக்கையின் போது அறவிப்படும் வரி வரையறை நாளை முதல் காலாண்டுக்கு 75 மில்லியன் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதேபோல் காலாண்டுக்கு 75 மில்லியனுக்கும் குறைவாக வரி செலுத்தும் வியாபாரிகளுக்கான வெட் வரி இரத்துச் செய்யப்படுவதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.