Header Ads



ரணிலின் பின்னால்சென்று, கத்தியால் குத்தமாட்டேன் - 66 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்தேன் - சஜித்

பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 66 தடவைகளுக்கு மேல் தன்னிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் மனம் திறந்து பேசியிருக்கிறார் சஜித். இதன்போது பேசிய அவர்,

“எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிரான குற்றச்சாட்டு தீர்மானத்தின் போது ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முக்கிய பங்கை ஒருபோதும் மறக்கவில்லை.

இதற்கமைய நான் எந்த தினத்திலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னால் சென்று கத்தியால் குத்துகின்ற பாணியில் அரசியல் மேற்கொள்ளவில்லை.

விசேடமாக கடந்த ஆட்சிக்காலத்தில் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி 66 தடவைகளுக்கு மேல் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். எனினும் அதை நிராகரித்ததனால் ரணில் விக்ரமசிங்கவிற்கு பட்ட எனது அரசியல் கடன்களை செலுத்தி முடித்துள்ளேன்.

இதேவேளை, கரு ஜயசூரியவை அரசியலுக்கு கொண்டுவந்தது எனது தந்தை தான். ரணில் - கரு இருவரையும் எதிர்க்கும் அரசியலை தொடர மாட்டேன்.

கட்சி தலைமைத்துவம் கட்டாயம் என்வசம் கிடைக்கும் என்பது எனக்கு தெரியும் என்பதால் கட்டாயப்படுத்தி பெற்றுக்கொள்வதற்கான அவசரம் எனக்கு இல்லை” என்றார்.

1 comment:

  1. Chaos traped UNP how to face forthcoming general election and win.As long as double game players existing in the Party the supporters zoo will lose their faith in the Party

    ReplyDelete

Powered by Blogger.