Header Ads



வடக்கு மாகாண, ஆளுநராக சார்ள்ஸ்...?

வடக்கு மாகாண ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியான திருமதி சார்ள்ஸை நியமிக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வரும் சில தினங்களில் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில், திருமதி சார்ள்ஸ் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், வட மாகாணம் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது.

இந்நிலையில் திருமதி சார்ள்ஸை ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

முன்னதாக சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக திருமதி சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. நட்புக்குரிய திருமதி சாள்ஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். போரில் சிதைந்த யாழ்பாணத்து இயற்கையை மீழ மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக போரில் அழந்த காடுகளை பனந்தோப்புகளை மீழ உருவாக்க வேண்டிய பணி பார்தீனியம் அகற்றும்பணி மணல் மாபியாக்களிடமிருந்து வடபகுதி நீராதாரத்தையும் கடல்கரைகளையும் பாதுகாக்க வேண்டிய பணி குழங்களை வாய்க்கால்களை செப்பனிடும்பணி என பெரும்பணிகள் உங்களுக்காகக் காத்திருக்கிறது. தமிழ் முஸ்லிம் அகதிகள் புனர்வாழ்வுப்பணிகளும் அரைகுறையாக உள்ளது, திருக்கேதீஸ்வர தெருப்பிரச்சினைபோன்ற பஞ்சாயத்துகள் உள்ளன. wஈண்ட நெடுங்காலமாக உங்களைப் போன்ற ஆழுமைமிக்க நிர்வாக தலைமையை வடமாகாணம் காத்திருக்கிறது. உங்களுக்கு நல்வாழ்த்துக்களும் நல்லாதரவும் தோழமைக்குரிய திருமதி சாள்ஸ்.

    ReplyDelete
  2. சிறந்த நிருவாகியாக மட்டும் செயற்படக்கூடியவர். மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. What is her full name? Could you give us her brief Bio?

    ReplyDelete

Powered by Blogger.