December 25, 2019

குறைந்த கட்டணத்திலும், குறைந்த விமான கட்டணத்திலும் ஹஜ் கடமையை நிறைவேற்ற நடவடிக்கை


2020  ஆம் ஆண்டு  இம்முறை புனித ஹஜ் யாத்திரை நிறைவேற்றச் செல்வதற்காக  ஹஜ் கோட்டா 3500  வழங்கப்பட்டுள்ளது. இன்னும்  மேலதிகமான கோட்டா அதிகரித்துத் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இம்முறை அதற்குப் பொறுப்பான  அமைச்சர் ஒருவர் இல்லா விட்டாலும் எமது நாட்டின் பிரதமரின்  சிறந்த வழிகாட்டலுடன் அனுப்பி வைக்கப்பட்ட ஹஜ் குழுவினரை வரவேற்று கௌரமளித்ததுடன் இலங்கையில் இருந்து வரும் ஹஜ் யாத்திரையாளர்களுக்கு உரிய சலுகைகளையும் வசதி வாய்ப்புக்களையும் வழங்குவதற்கு  சவூதி அரேபியா அரசாங்கம் எப்பொழுதும் தயாராக இருப்பதாக  ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்  நியமிக்கப்பட்ட  ஹஜ் குழுவினர் அதன்  தலைவர் மர்ஜான் பளீல் தலைமையில் ஐவர் கொண்ட ஹஜ் குழு நேற்று முன்தினம் சவூதி அரேபியாவுக்கு விஜயம்  மேற்கொண்டுள்ளனர்.

 அங்குள்ள ஹஜ் விவகார அமைச்சில் இரு நாடுகளுக்கிடைலான  சந்திப்பு இடம்பெற்றது.    சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி அப்துல் சுலைமான் மற்றும்  ஹஜ் குழுவினவின் தலைவர் மர்ஜான் பளீல் இருவருமிடையிலான  ஹஜ் கோட்டாவுக்கான ஒப்பந்தத்திலும்  கைச்சாத்திடப்பட்டது. .

அங்கு மேற்கொண்டுள்ள விஜயம் தொடர்பாக ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல்  இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை புனித  ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் விடயத்தில் அறவிடப்படும் கட்டணத்தை குறைத்து ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்துவதில்   ஹஜ்  குழுவினர் பல கலந்துரையாடல்களை  சவூதி நாட்டு அரசாங்கத்தினுடைய சம்மந்தப்பட்ட ஹஜ் குழுவின் அதிகாரிகளுடன்   பல சுற்றுப்   பேச்சு வார்த்தைகளில்   ஈடுபட்டுள்ளனர். 

அது மட்டுமல்ல  சவூதி அரேபியா நாட்டின் விமானச் சேவை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விமான பயணற் சீட்டுக்களை குறைந்த  விலைக்குப் பெற்றுக் கொள்வதற்கென  ஒரு வேண்டுகோளையும் அவர்களிடம் முன் வைக்கப்பட்டுள்ளது எனவும்  அவர் தெரிவித்தார்.

எமது பிரதமர் முஸ்லிம்களுடைய ஹஜ் யாத்திரை விடயத்தில் குறைந்த கட்டணத்தில் முஸ்லிம்களை புனித ஹஜ்ஜுக்கு அனுப்பி வைப்பதில் கூடுதலான கவனத்தை கொண்டுள்ளார். எனவே எம்முடைய ஹஜ் குழுவினர் எந்தளவுக்கு குறைந்த செலவில் மக்களை  புனித ஹஜ் யாத்திரை செல்வதற்கான வழிமுறைகளை இங்கு ஆராய்ந்து வருகின்றார்கள்.

நாங்கள் நாடு திரும்பியதும் முகவர்களுடன் ஊடாக  மக்களை ஹஜ் யாத்திரைக்காக அனுப்புவதா அல்லது  மாற்று நடவடிக்கைகள் மூலமாக அனுப்புவதா என்ற தீர்மான அறிக்கையொன்றை பிரதமர் கையில் சமர்ப்பிக்கவுள்ளோம்.   இதற்கு முன்னர் ஹஜ் விவகாரத்தில் காணப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் இல்லாமற் செய்து  ஒரு நல்ல முறையில் புனித ஹஜ்ஜை மேற்கொள்வதற்கான செயற் திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மக்கா ஹஜ் குழுவின் தலைவர்  எச். ஈ.  கலாநிதி ரவூப் பின் இஸ்மாயில் உள்ளிட்டவர்களுடன் ஐந்து பேர் கொண்ட தூதுக் குழுவில்  நகீப் மௌலானா  அப்துல் சத்தார் அல்கம் உவைஸ் புவாட் ஜமீல் முதலிய பிரதிநிதிகளுடன்  இலங்கைக்கான ரியாத் உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுவர்  அஸ்மி தாசிம் முன்னாள் ஜித்தா உயர்ஸ்தானிகராலயத்தின் கவுன்சிலரும் முன்னாள் மேல் நீதி மன்ற நீதிபதியுமான அப்துல் சலாம்  மக்கா ஹரத்தின் குர்ஆன் பதிப்பகத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாதீக் சாதிஹான் ஷெய்லாணி அப்துல்  காதர் மசூர் மௌலான ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி0 கருத்துரைகள்:

Post a Comment