Header Ads



றிசாத்தை பிடித்து தண்டியுங்கள், அவர் வெளியே இருந்தால் பாதிப்பு, ஜனாதிபதிக்கு நீளமான கடிதம்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

ரிசாத் கைது செய்யப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும். பிணை பெற முடியாத விசேட உயர் நீதிமன்றத்தில் தினமும் வழக்கு விசாரித்த பின்னர் அவருக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ரிசாத்தை கைது செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீளமான கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் தொடர்ந்து வெளியே சுதந்திரமாக இருந்தால் இலங்கையினுள் இனவாதம், மதவாதம், சுற்றுசூழல் பாதிப்பு போன்றைவை வேகமாக அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. நாங்கள் றிசாத்தின் அரசியல் அணுகுமுறைக்கு எதிரானவர்கள.அதற்காக இனவாத அடிப்படையில் மட்டும் பலிதீர்க்க முற்படவும் கூடாது.தீர்ப்பையும் மதவாதிகள் முன்வைக்கவும் கூடாது.
    அவர் தவறு செய்தால் தண்டிப்பது நீதித் துறையின் பொறுப்பு. இலங்கையின் தேசிய பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்த மத்திய வங்கிக் கொள்ளையர்களான மகேந்திரன்,ரனில், ரவி என நீண்ட பட்டியல் இருக்க இத் தேரர் றிசாத்தை மட்டும் குறிவைப்பது இனவாதமே.

    ReplyDelete
  2. A thief under the guise of gentleman! He must be arrested! No more lame excuses.

    ReplyDelete
  3. இந்தப் பதிவிற்கு அதிசிறந்த பதிவினை விடுவதற்கு எங்களாலும் இயலும் ஆனால் தேவையற்ற விமர்சனத்தைக் கருதி இதற்கு எதிரான அல்லது மாற்றுக் கருத்துக்களை எழுதுவதை தவிர்த்துக் கொள்கின்றோம்.

    ReplyDelete
  4. this kind of baseless and meaningless complaints and undertaking actions will mislead the country's politics.

    ReplyDelete

Powered by Blogger.