Header Ads



வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பதிவு, செய்யும் கட்டணம் குறைக்கப்பட்டது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக செல்பவர்களின்  பதிவுக்  கட்டணம் மற்றும் பதிவை புதிப்பிப்பதற்காக    அறவிடப்படும் கட்டணம் என்பன குறைக்கப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பதிவு கட்டணமாக இருந்த 17 ஆயிரத்து 837 ரூபாய்  தற்போது 16 ஆயிரத்து 416 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.  

அதேபோல், பதிவினை புதுப்பித்தலுக்கான கட்டணம் 3,755 ரூபாய்  இப்பொழுது 3,456  ரூபாவாக  குறைக்கப்பட்டுள்ளது.  

இந்த குறைப்பு கடந்த  முதலாம்  திகதியிலிருந்து   நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பணியகம் மேலும்  தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.