Header Ads



சம்பிக்கவின் கைது, ரணிலை பாதுகாக்கும் நாடகமா...?

வாகன விபத்து சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை காப்பற்ற அரசாங்கம் நடத்தும் நாடகமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பாக தற்போது வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை வேறு பக்கம் திசை திரும்பும் நோக்கில் அரசாங்கம் நாடகம் ஒன்றை உருவாக்கி வருகிறதா என்ற சந்தேகம் ஐக்கிய தேசியக் கட்சியினர் மத்தியில் இருந்து வருகிறது.

வாழ்க்கை செலவு வான் மட்டத்திற்கு உயர்ந்துள்ள நிலையில், அது பற்றி பேசாது, காய்கறி, அரிசி கேட்ட மக்களுக்கு அவற்றை வழங்காது, மண், கல் அகழ்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

எம்.சீ.சீ. உடன்படிக்கை நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும், ஏகாதிபத்தியத்திடம் காட்டிக் கொடுக்கும் உடன்படிக்கை என சுட்டிக்காட்டிய அரசாங்கம் தற்போது அந்த உடன்படிக்கையில் 70 வீதம் சிறந்தது என கூறுகிறது எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.