Header Ads



நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது, தேர்தலின்பின் ஓய்வு பெறுவேன் - ரணில்


பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருப்பதாக தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்துவரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் கிடையாதெனத் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். 

வரக்கூடிய தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும் வகையில், முன்னின்று செயற்படத்தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

வருட இறுதி விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை மாலை இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்னர் வியாழக்கிழமை மாலை கொழும்பு மாளிகாகந்த மகாபோதி விகாரையில் வைத்து தினகரன் வாரமஞ்சரிக்காக சிறப்புப் பேட்டியை வழங்கும் போதே தனது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். 

42 வருடகால அரசியல் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டதாகக் கூறிய ரணில், விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியை பலதடவைகள் வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றி கரையேற்றியதை இங்கு நினைவு கூர்ந்தார். இளம் தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பொறுப்புக்களைப் புதியவர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானித்திருப்பதாகவும் கூறினார்.  

இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் செயற்குழுவைக் கூட்டி புதிய குழுவை அமைக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்த அவர், பொதுத்தேர்தல் வரை தலைமைத்துவக்குழுவை அமைப்பதற்கு எண்ணியிருப்பதாகவும் தலைமைத்துவக்குழு சபாநாயகர் கரு ஜயசூரியவின் பொறுப்பில் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

அதே சமயம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் தேர்தலில் பெரும்பான்மையான இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

புதிய பாதையில் பயணித்துப் பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவைத் திரட்டுவதோடு, சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள எண்ணி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தேர்தலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்கவிருப்பதாகக் கூறிய அவர், தேர்தலில் போட்டியிடும் எண்ணம் கிடையாதெனவும் தேர்தலுக்குப் பின்னர் அரசியலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால முன்னேற்றப் பணிகளுக்கு வெளியே இருந்து ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுக்கத்தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார். 

எம்.ஏ.எம். நிலாம்  

2 comments:

  1. Why wait till general election, quit now.

    ReplyDelete
  2. Tectise answer ,He can't fight again Mr.President and his brothers..

    ReplyDelete

Powered by Blogger.