December 24, 2019

மிகவிரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம், வழங்கப்படுமென உறுதியளிக்கிறேன் - அமைச்சர் டலஸ்

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் கல்வி அமைச்­ச­ரா­க­வி­ருந்த சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்குப் பின்னர் இந்­நாட்டில் மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென என்­னிடம் தெரி­விக்­கப்­பட்­டது.மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் எதிர்­வரும் மாதத்­திற்குள் வழங்­கப்­ப­டு­மென நான் உறு­தி­ய­ளிக்­கிறேன் என்று கல்வி, விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.

கடந்த காலங்­களில் தேர்தல் நெருங்­கும்­போது போட்டிப் பரீட்­சைகள் மற்றும் நேர்­முகப் பரீட்சை நடத்­தப்­படும். ஆனால் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. இவ்­வா­றான ஒரு கலா­சா­ரமே கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­றது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைத்து விரைவில் மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

வெலி­கம பாரி அரபுக் கல்­லூ­ரியின் 135ஆவது வருட பூர்த்­தி­வி­ழாவில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார். இவ்­வி­ழா­வுக்கு கல்­லூ­ரியின் அதிபர் மௌலவி அல்-­ஹாபிழ் ஏ.ஆர்.அப்­துர்­ரஹ்மான் (மழா­ஹிரி) தலைமை வகித்தார். தொடர்ந்து அமைச்சர் அங்கு உரை­யாற்­று­கையில்,

1884ஆம் ஆண்டு இலங்­கையில் முதன் முத­லாக ஸ்தாபிக்­கப்­பட்ட வெலி­கம மத்­ர­ஸதுல் பாரி அரபுக் கல்­லூரி தமது 135 ஆவது வருட பூர்த்தி விழாவை கொண்­டாடும் இச்­சந்­தர்ப்­பத்தில், 1869ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இலங்கைக் கல்வித் திணைக்­களம் 150 வருட பழ­மை­யா­னது. இது பிரித்­தா­னிய ஆட்­சி­யின்­போதே ஆரம்­பிக்­கப்­பட்­டது. இலங்­கையின் பழைய அரபுக் கல்­லூ­ரி­யான இம்­மத்­ர­ஸாவின் 135வது வருட பூர்த்தி விழாவில் கலந்­து­கொள்ளக் கிடைத்­த­தை­யிட்டு பெரு­ம­கிழ்ச்­சி­ய­டை­கிறேன்.

இன்று பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் இங்கு கல்வி கற்று மௌல­வி­க­ளாக, ஹாபிழ்­க­ளாக பட்டம் பெறும் உங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் என்­ற­வ­கையில் நான் இச்­சந்­தர்ப்­பத்தில் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக் கொள்­கிறேன். நான் இன்று கல்வி அமைச்சுப் பத­வியை பொறுப்­பேற்று ஒரு மாத­காலம் மாத்­தி­ரமே. இவ்­வொ­ரு­மாத காலத்­துக்குள் நான் இது­வரை நான் கற்ற பாட­சா­லை­க­ளான கொழும்பு ஆனந்தாக் கல்­லூரி, மாத்­தறை சென்ட் சேர்­விஸஸ் கல்­லூரி ஆகி­ய­வைக்கு நான் சென்­ற­தில்லை. படித்த பாட­சா­லைக்கு முதன்­மு­த­லாக செல்­வதே சம்­பி­ர­தாயம். எனினும், எமது தலைவர், முன்னாள் வெலி­கம நக­ர­சபை தலைவர் எச்.எச்.முஹம்­மதின் வேண்­டு­கோளை எனக்கு நிரா­க­ரிக்க முடி­யாது. என­வேதான் நான் இன்று இங்கு வந்­துள்ளேன்.

உலக முஸ்­லிம்­களின் சனத்­தொகை 1.8 பில்­லியன் ஆகும். இது உலக சனத் தொகையின் 24 வீதம் ஆகும். இலங்கை சனத் தொகையில் 11 மில்­லியன் ஆகும். இதனை உலக சனத் தொகை­யுடன் சேர்க்கும் போது 1.8 பில்­லியன் ஆகும். அனை­வரும் ஒரே மனித குலம் தான் நாம் இன்று சிங்­களம், தமிழ், முஸ்லிம், பறங்­கியர் என வேறாகப் பிரிந்­தாலும் மனிதன் என்ற வகையில் நாம் அனை­வரும் ஒரே மனி­த­கு­லமே. நாம் மொழி ரீதியாக் பிரிந்­தி­ருந்­தாலும் எமது கலா­சாரம், சம்­பி­ர­தாயம் என்ன? எல்லா இனத்­திலும் தடுக்­கப்­பட்­டவை, அனு­ம­திக்­கப்­பட்­டவை என இரண்­டுதான் உள்­ளன. முஸ்­லிம்கள் இதைத்தான் ஹராம், ஹலால் என்பர். இதில் சிங்­க­ளவர் முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் என்ன வேறு­பாடு இருக்­கின்­றது. அதற்கு மேலாக செய்­யாமல் இருந்தால் நன்று என்ற ஒன்றும் உண்டு அதுதான் ‘மக்ரூஹ்’ என்பர். இது அனைத்­திலும் சமத்­துவம் காணப்­ப­டு­கின்­றன. இன்று அதி­க­மானோர் சமத்­து­வ­மில்­லா­த­தையே நாடிச் செல்­கின்­றனர். சமத்­துவம் இல்­லா­த­தற்கு பிர­தான காரணம் மொழிப் பிரச்­சி­னை­யாகும்.

எமது நாடு ஒரு சிறிய தீவு இச்­சி­றிய தீவுக்குள் இரண்டு மொழி­கள்தான் உள்­ளன. அது தமிழ் மொழி, சிங்­கள மொழி ஆகும். என்­றாலும் அத­னையும் எமக்குப் புரிந்­து­கொள்ள முடி­யா­துள்­ளது. ஐரோப்­பிய நாடு­களை நோக்­கினால் அவர்­க­ளுக்கு அவர்­க­ளது சுதேச மொழி­யோடு அண்டை நாட்டு மொழி­களும் பேசவும் விளங்­கவும் முடி­யு­மாக உள்­ளன. பல மொழி­களைப் பேசக்­கூ­டிய ஆற்றல் உள்­ள­வர்­க­ளாக ஐரோப்­பிய நாட்டு மக்கள் உள்­ளனர்.

எமது நாட்டின் முதல் பிர­தமர் டீ.எஸ். சேனா­நா­யக்க அன்று எமது நாட்டின் இரு மொழி­க­ளையும் அதா­வது, தமிழ் – சிங்­களம் ஆகி­ய­வையை அர­ச­க­ரும மொழி­யாக அங்­கீ­க­ரித்­தி­ருந்தால் பிரச்­சினை எதுவும் உரு­வா­கி­யி­ருக்க மாட்­டாது. அவ்­வாறு அவர் அன்று செய்­யா­த­தி­னால்தான் இன்று பிரச்­சி­னைகள் உரு­வா­கி­யுள்­ளன. சிங்­க­ள­வர்­க­ளுக்குத் தமிழ் புரி­வ­தில்லை, தமி­ழர்­க­ளுக்கு சிங்­களம் புரி­வ­தில்லை. புரி­யாத மொழியில் பேசும்­போது அது மூளைக்கு மாத்­தி­ரம்தான் சென்­ற­டையும். ஆனால் தெரிந்த மொழியில் பேசும்­போது அது உள்­ளத்­திற்குப் போய்ச் சேரு­மென நெல்சன் மண்­டேலா ஒரு சந்­தர்ப்­பத்தில் குறிப்­பிட்­ட­தையும் அமைச்சர் நினை­வூட்­டினார்.

இன்று எமது நாட்­டுக்கு சிறந்த தலை­மைத்­துவம் ஒன்று கிடைத்­துள்­ளது. இத­னால்தான் சிங்­க­ளவர், தமிழர் மற்றும் முஸ்­லிம்கள் அச்­ச­மின்றி வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். அர­சியல் சதி­க­ளுக்குள் யாரும் சிக்­கிக்­கொள்ள வேண்டாம். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் தலை­மை­யி­லான இவ்­வ­ர­சாங்கம் இந்­நாட்டு மக்கள் அனை­வரும் இலங்­கையர் என்றே நோக்­கு­கின்­றது. நாம் அனை­வரும் இலங்கை நாட்டு குடும்­பத்­தி­னரைச் சேர்ந்­த­வர்கள்.

இந்த நம்­பிக்­கையை உள்­ளத்தில் உறுதி கொள்­ளுங்கள். கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கத்தில் கல்வி அமைச்­ச­ராக இருந்த சுசில் பிரேம ஜயந்­த­வுக்குப் பின்னால் இந்­நாட்டில் மௌலவி நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென இங்கு நக­ர­சபை முன்னாள் தலை­வரால் சுட்­டி­காட்­டப்­பட்­டது. எதிர்­வரும் சில மாத காலத்­துக்குள் இந்த மௌலவி நிய­ம­னத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க நான் இச்­சந்­தர்ப்­பத்தில் உறு­தி­ய­ளிக்­கிறேன். தேர்தல் நெருங்கும்போது போட்டிப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை என்பன நடாத்தப்படும். ஆனால் நியமனம் வழங்கப்படுவதில்லை. இவ்வாறான ஒரு கலாசாரமே கடந்த வருடங்களில் இருந்தன என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைசசர் மஹிந்த யாப்பா அபேவர்தன. வெலிகம பிரதேச சபை தலைவர் புஷ்பகுமார பெட்டகே, வெலிகம நகரசபை முன்னாள் தலைவர் எச்.எச்.முஹம்மத், வெலிகம நகரசபையின் தற்போதைய உபதவைலர் எம்.ஜே.மின்ஹாஜ் உட்பட பெருமளவிலான உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.-vidivelli

3 கருத்துரைகள்:

இத்தகவல்களைக் கேட்கும் போது உண்மையில் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.நன்றிகளையும் பாராட்டுக்களையும் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்.

ஆனால் இவை வெறும் பசப்புவார்த்தைகள் மட்டும்தான் என்பதை திகதியையும் போட்டு குறித்துவைத்துக் கொள்ளுங்கள். கடந்த காலங்களில் எத்தனையோ சோனக மந்தி(ரிமார்)கள் எழுதியும் பேசியும், ஒரு மௌலவி நியமனமாவது செய்யவோ அது பற்றி காத்திரமான முயற்சிகள் எதுவும் கல்வி அமைச்சால் மேற்கொள்ளவில்லை. இந்த அரசு அதனை மேற்கொள்ளும் என்பதற்கு வெறும் பசப்பு வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் நடைபெறப்போவதில்லை. முடியுமானால் சரியான ஒரு அமைப்பை உருவாக்கி அலிசப்ரி சட்டத்தரணி மூலம் சனாதிபதியை ஒரு முக்கிய குழு சந்தித்து கோரிக்கையை முன்வையுங்கள். அதன்பிறகு நடைபெறுமா இல்லையா என்பது அல்லாஹ்வுக்குத்தான் வௌிச்சம்.

Post a Comment