Header Ads



சஜித்தின் கீழ் செயற்பட விருப்பமில்லை - ரணிலுக்கு மிரட்டல் விடுத்துள்ள 15 பேர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகினால் அவருடன் பல உறுப்பினர்களும் அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளனர்.

கட்சியை சேர்ந்த சுமார் 15 உறுப்பினர்கள் இந்த முடிவில் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ் செயற்பட விரும்பவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து சமகால தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

அத்துடன் அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடப் போவதில்லை எனவும், வர்த்தக நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பல சிரேஷ்ட உறுப்பினர்களே இந்த நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தனக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாஸ கோரி வருகிறார். அவருக்கு 50இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கட்சியை விட்டு சிரேஷ்ட உறுப்பினர்கள் வெளியேறத் தீர்மானித்துள்ளமை சஜித்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

3 comments:

  1. அந்த முனபிக்குகள் 50 அல்லது அதைவிட மேலான தொகையினர் உடனடியாக ஓய்வு பெற்று எங்காவது தொலைந்து விட்டால் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் சுபீட்சமாக இருக்கும்.

    ReplyDelete
  2. யார் தலைவரானாலும் எதையும் சாதிக்கப் போவதில்லை. இன்னும் குறைந்தது 15 வருடங்கள் வரை இருந்து ஆற அமர நன்றாக சிந்தித்து தீர்க்கமான முடிவுக்கு வரலாம்.
    தேவையாயின் ஹக்கீமும் றிசாத்தையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  3. இந்தப் 15 பேரோடு 16 பேரும் வெளியேறினால் தான் ஐ தே கட்சிக்கு விடிவு கிடைக்கும்.இவர்கள் ஏற்கனவே ஸஜித்தின் வெற்றிக்கு உழைக்காதவர்களே

    ReplyDelete

Powered by Blogger.