Header Ads



பல்கலைகழக Z Score முறையை நீக்குவதென, கோட்டாபய கூறுவது கொலையைவிட ஆபத்தானது

அரச பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் போது எதிர்காலத்தில் z ஸ்கோர் முறைமை கவனத்தில் கொள்ளப்படாது என பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை ஏழை மக்களின் பிள்கைகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாக அமைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

நெகு பவுர தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே பிரதமர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் நாட்டில் சுதந்திரத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நாட்டின் சுகாதார துறை மற்றும் கல்வித்துறைக்காக பெருமளவு நீதியை ஒதிக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளுக்கு நவீன உபகரணங்களையும், மருந்து வகைகளையும் வழங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், எதிர்காலத்திலும் அவ்வாறான சேவையை முன்னெடுப்பதற்காகவே சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

z ஸ்கோர் முறைமை நீக்குவது ரத்துபஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையைவிட ஆபத்தானது என தெரிவித்த பிரதமர் அந்த முறைமை நீக்கினால் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் வருடாந்தம் பாதிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.