Header Ads



இலங்கை வாழ் முஸ்லிம்களே,, சிந்தித்து வாக்களியுங்கள் - SLMDI - UK

அஸ்ஸலாமு அலைக்கும், 

இலங்கைத் தேசத்தில் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள 8 வது ஜனாதிபதித் தேர்தலில் வாக்குரிமை எனும் ஆயுதத்தினை முஸ்லிம் சமூகம் பலமாக பயன்படுத்த வேண்டும் என SLMDUK இலங்கை வாழ் முஸ்லிம்களை மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றது.

வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை மட்டுமன்றி, இஸ்லாமிய நோக்கில் அது ஒரு அமானிதமும் கடமையும் சாட்சியமளித்தலுமாகும். அந்த வகையில் வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்யாது, நாட்டு மற்றும் சமூக நலனை மையப்படுத்தி தமது வாக்குகளை அளிக்க ஒவ்வொரு முஸ்லிமும் முன்வர வேண்டும். 

"எப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலினை அடுத்து முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் தேசிய ரீதியினால் இந்த தேர்தல் இடம்பெறுகின்றது. 

இதனால் முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். வாக்களிப்பின் ஊடாக உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டு  நாட்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசின் முக்கிய பங்களிகளாக முஸ்லிம் சமூகம் காணப்பட்டது. இரு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தி போதும் அது நாட்டு  மக்களின் நலன்களில்  போதிய கரிசணை உள்ள வீரியமான அரசாங்கமாக செயற்படவில்லை என்பதை அனைவராலும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதலை ஒரு சிறிய குழுவினர் மேற்கொண்ட போதிலும், முழு முஸ்லிம் சமூகமுமே பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியது. இதற்கு மேலதிகமாக இலங்கை வாழ் முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் எந்தவித அக்கறையினையும் செலுத்தவில்லை என்பதை எமது அமைப்பு கவலையுடன் தெரிவித்துக்கொள்வதுடன் அதன் பின்னரான காலப் பகுதியில் முஸ்லிம் சமூகம் திருப்தியடையும் வகையில் அரசாங்கம் செயற்பட்டவில்லை என்பதும் முக்கிய விடயமாகும். 

இவ்வாறான நிலையில், இந்த தேர்தலிலை இலங்கை வாழ் முஸ்லிம்கள் அவதானமாக கையாள வேண்டியுள்ளது. 35 பேர் போட்டியிடுகின்ற இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரதானமானவர்களாவார். எனினும் இந்த மூன்று வேட்பாளர்களும் வெளியிட்டுள்ள விஞ்ஞாபனம் முஸ்லிம் சமூகம் திருப்பத்தியடையும் வகையில் அமையவில்லை என்பதும் கவலை அளிக்கின்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள்,  சம்பிக்க போன்ற முஸ்லீம் எதிர்ப்பு முகாம்களின் சூத்திரதாரிகளும் சஜித் பிரேமாதசாவிற்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை வெளியிட்டு தேர்தல் காரணமாக நிறுத்தியுள்ள விமல் வீமரவன்ச, அதுரலிய ரத்ன தேரர் உதய கம்பன்வில ஆகியோருடன் இணைந்து முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கின்றனர். 

அடுத்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரா குமார திஸாநாயக்கவிட்கு வாக்களிக்க விரும்புபர்கள் கொள்கை அரசியலால் ஈர்க்கப்பட்டவர்கள். தோற்றாலும் பரவாயில்லை ஒரு கொள்கையை ஆதரித்த திருப்தி இருக்கும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.பாரம்பரிய அரசியல் கலாச்சாரங்களை விட்டு விலகி, பணம் வாங்கி வாக்குப் போடும் கலாச்சாரத்திற்கு அப்பால் நின்று ஒரு மாற்று அரசியல் தேவைக்காக மூன்றாம் சக்தியை ஆதரிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களின் அரசியல் மனநிலை கொள்கை அடிப்படையிலானது.அதனால் ஒரு உறுதியான மூன்றாம் தரப்பை உருவாக்கவும்,ஏனைய பாரம்பரிய அரசியல் தலைமைகள் மீது அதிருப்தியைக் காட்டவும் நினைக்கிறார்கள்.

இந்த தேர்தலின் தீர்மானிக்கும் சக்தியான சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை மையப்படுத்தி பல்வேறு கட்சிகளும் தமது பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள இத்தேர்தலில் எமது வாக்குகளை முறையாக பயன்படுத்த வேண்டும். இத்தேர்தல் முடிவுகள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மைபயக்கும் வகையில் அமைய வேண்டும் . 

வரவிருக்கும் தேர்தல்கள் நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லீம் சமூகத்திற்கும் யார் வெற்றி பெற்றாலும் ஒரு தீர்க்கமான தேர்தலாக இருக்கும். துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு  தெளிவான ஒரு அரசியல் நோற்க்கும் திட்டமிடலும் இல்லாததால், அரசியல் கட்சிகள் சமூகத்தை வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்வதை நாம் காணக்கூடியதாக உள்ளது. நாங்கள் இதனை வண்மையாக கண்டிருக்கிறோம். 

எனவே, யார் ஆட்சிக்கு வந்தாலும், இலங்கை முஸ்லிம்கள் மீதான வெறுப்பு உணர்வும், இனத்துவேச நடவடிக்கைகளும் உடனடியாக நின்றுவிடப்போவதில்லை. இது இனவாதிகளால் நன்கு திட்டமிட்டு மிகப்பெரிய நிகழ்ச்சி நிரலோடு இடெம்பெறுகின்ற ஒரு இனத்தின் மீதான அடக்குமுறையின் ஆரம்ப வடிவம். அதுதான் நம் நாட்டிலும் முஸ்லீம் சமூகத்தின் மீது ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றது.  நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வாழும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிர் வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டிய மிகப் பாரிய வேலை இருக்கின்றது. அது நன்கு திட்டமிடப்பட்டு சமூகத்தின் அணைத்து தரப்புக்களையும் உள்ளடக்கியதானா ஒரு வேலைத்திட்டமாக அமைய வேண்டும் இன்ஷா அல்லாஹ் இப்படியான ஒரு வேலைத்திட்டத்தை எதிர் வரும் காலம்களில் உங்கள் அனைவரது ஆதரவுடன் SLMDI UK மேட்கொள்ள இருக்கின்றது.

தேர்தலில் எந்த தரப்பு வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியையே வெளிப்படுத்துகின்ற போது மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களை மிகவும் பணிவுடன் SLMDI UK கேட்டுக்கொள்கின்றது. குறிப்பாக சமூக ஊடகம்களை கையாளுகின்றவர்கள் மிக அவதானமாக நடந்து கொள்ளவேண்டும். சமூகம்களுக்கு இடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்ற வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டு கொள்கின்றோம். 

நன்றி.
வஸ்ஸலாம்.
SLMDI UK.

No comments

Powered by Blogger.