November 05, 2019

தயாசிறியின் காதைப் பிடித்து நாமே, கட்சியிலிருந்து அவரை நீக்குவோம் - குமார வெல்கம

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த தீர்வு கிடைக்கப் பெற்றால் தயாசிறியையே முதலில் விரட்டியடிப்போம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் கொழும்பு - சுகததாச உள்ளக அரங்கில் இன்று நடைபெற்ற சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சந்திரிகா குமாரதுங்கவுக்கு பின்னர் நானே ஸ்ரீலங்கா சுதந்திர பற்றி பேசுவதற்கு தகுதியுள்ள சிரேஷ்ட உறுப்பினராவேன். சிறிமாவோ பண்டாரநாயக்க எனக்கு அகவத்தை தொகுதியை வழங்கி 38 வருடங்களை நிறைவடைந்துள்ளன. 

மிக நீண்ட காலம் நான் சுதந்திர கட்சியின் அமைப்பளராக இருந்திருக்கிறேன். முன்னாள் பிரதமர் எஸ்.டபில்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க 1951 ஆம் ஆண்டு சுதந்திர கட்சியை கட்டியெழுப்பினார். 

டீ.எஸ்.சேனாநாயக்க உயிழந்ததன் பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்ட பண்டாரநாயக்கவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பதாலேயே அவர் ஐ.தே.கவிலிருந்து பிரிந்து சு.கவை ஸ்தாபித்தார். 

கட்சி உருவாக்கப்பட்டு முதலாவது தேர்தலில் 8 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. 1957 ஆம் ஆண்டு மீண்டும் பாரிய வெற்றி கிடைக்கப்பெற்றது. மிகக் குறுகிய காலத்தில் அவர் பல நன்மைகளை செய்திருக்கிறார். 1959 ஆம் ஆண்டு அவர் கொல்லப்பட்டதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவே கட்சியை முன்னோக்கி கொண்டு சென்றார். 

நான் இன்று அரசியலில் வெற்றி பெற்றிருப்பதற்கும் அவரே காரணமாவார். நான் மாத்திமரல்ல. மஹிந்த ராஸபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் அவரே உருவாக்கினார். 

சிரேஷ்ட தலைவியாக எமக்கு முறையான அரசியலைக் கற்றுக்கொடுத்தார். தனது குடியுரிமை நீக்கப்பட்ட போதிலும் கட்சியை வெற்றிப் பாதையில் கொண்டு சென்றார். எனவே சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. 

ஆனால் தற்போது அவ்வாறல்ல. வெவ்வேறு கட்சிகளிலிருந்து சுதந்திர கட்சியில் இணைந்தவர்கள் தற்போது கட்சியின் வரலாறு பற்றி பேசுகிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. நாமே சுதந்திர கட்சியை பாதுகாப்போம். 

அத்துடன் இந்த சம்மேளனத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் பதவிகள் அல்லது உறுப்புரிமை நீக்கப்படும் என்று யாரும் அச்சமடையத் தேவையில்லை. சந்திரிகா குமாரதுங்கவுடன் நானும் இணைந்து முன்னின்று அனைவரையும் பாதுகாப்போம்.அச்சமின்றி அனைவரும் எம்முடன் ஒன்றிணையுங்கள். இதுவே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள இறுதி வாய்ப்பாகும். 

ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறும் கட்சி செயலாளருக்கு எதுவும் செய்ய முடியாது. இவ்வாறானவர்கள் எத்தனை கட்சிகளுக்கு தாவியிருக்கிறார்கள் ? அவர்களால் சந்திரிகா குமாரதுங்கவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா ? தந்தையும் தாயும் கட்டியெழுப்பிய இந்த கட்சியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க நீக்கப்படுவார் என்று தயாசிறி ஜயசேகர கூறுகிறார். ' இந்த தேர்தலில் சிறந்த தீர்வு எமக்கு கிடைக்கப் பெற்றால் காதைப் பிடித்து நாமே உங்களை கட்சியிலிருந்து அப்புறுப்படுத்துவோம் ' என்பதை தயாசிறிக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் இதன்போது கூறினார்.

1 கருத்துரைகள்:

இவர் ஓரளவு நியாயமானவர், அதனால் அவருக்கு கட்சியில் எவ்வளவு தூரம் ஒத்துழைப்பு கிடைக்கும் என்பது நிச்சியமில்லை. அரசியலில் நயவஞ்சகம் எவ்வளவு தூரம் சாத்தியமோ அவ்வளவு தூரம் வெற்றியும் சாத்தியமாகும். அந்த நயவஞ்சகத்தின் அல்லது முனாபிக் தனத்தின் உச்ச கட்டத்திறமை மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்றது. அதனால் தான், ஒருபுறம் முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்து அவர்களைக் கொலைசெய்து அவர்களுடைய பொருளாதாரத்தை முற்றாக நாசப்படுத்தும் அதேவேளையில் மறுபக்கம் பேருவலை காலிபோன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு ஆசை காட்டி நயவஞ்சகத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி அவர்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும் திறன் அந்த நயவஞ்சனுக்கு நன்றாகவே இருக்கின்றது.

Post a comment