Header Ads



5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தபோதும், அதனை முழுமையாக அனுபவிக்காத ரணில்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார். 

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளை வகித்த பலரும் இன்று தத்தமது அமைச்சுப் பதவிகளுக்கு விடை கொடுத்தனர். 

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்த ரணில் விக்ரமசிங்க இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். 

அதன் பின்னர் அவர் அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றார். 

இலங்கையில் பல தடவைகள் பிரதமர் பதவியை வகித்த பெருமை ரணில் விக்ரமசிங்கவையே சாரும். 

1993 ஆம் ஆண்டு முதன் முறையாக பிரதமரான அவர், 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தவுடன் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

ரணில் விக்ரமசிங்க இரண்டாவது தடவையாகவும் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமராக தெரிவுச் செய்யப்பட்டார். 

இதனை அடுத்து 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தோல்வியடைந்து பிரதமர் பதவியில் இருந்து விடைப்பெற நேரிட்டதுடன் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனாவரி 9 ஆம் திகதி மூன்றாவது தடவையாகவும் பிரதமரானார். 

எனினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் அதே வருடத்தின் டிசம்பர் மாதத்தில் ஐந்தாவது தடவையாகவும் பிரதமர் பதவியை ஏற்றார். 

ஐந்து தடவைகள் பிரதமர் பதவியை வகித்திருந்தாலும் அவரால் ஒரு அரசாங்க காலத்திலேனும் பிரதமர் பதவியை முழுமையாக வகிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.