Header Ads



தாஜூதீனின் கொலை, முழு விசாரணை மேற்கொள்ள அரசாங்கம் தவறிவிட்டது - ராஜித

முக்கியஸ்தர்கள் தொடர்புபட்ட கொலைகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தவறிவிட்டது என்பதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்றுக்கொண்டுள்ளார்.

எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.

அரசாங்கம் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது.

எனினும் அவற்றில் பல குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைகளை செய்ய அரசாங்கம் தவறிவிட்டது.

இதில் லசந்த விக்கிரமதுங்க மற்றும் வாசி;ம் தாஜூதீன் ஆகியோரின் கொலைகளும் அடங்கும்.

இதில் தாஜூதீனின் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பு இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவும் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் அரசாங்கத்துக்கு தொடர்பு உண்டு என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

3 comments:

  1. Don’t forget that you were part of this government last five years.

    ReplyDelete
  2. உமக்கு வெட்கமென்பதெ இல்லயா ராஜித்த. இறைவனருளாள் கோட்டாபே ஜனாதிபதியானம் நீயும் உன்னுடைய கூட்டமும் கடலில் இறங்க வேண்டிவரும்

    ReplyDelete
  3. ஆம் ஐயா, தேர்தல்கள் கிட்டவரும்போதுதான் இந்த சம்பவங்கள் உங்கள்களுக்கு ஞாபகம் வரும்.
    இப்படியே சொல்லிச்சொல்லி 5 வருடத்தை ஒட்டிவிட்டீர்கள். இதை இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்லப்போகிறீர்கள்? உங்கள் நல்லாட்சியை நம்பி சிறுபான்மையினர் ஏமாந்ததுதான் மிச்சம்.

    ReplyDelete

Powered by Blogger.