Header Ads



உடனடியாக அமுலுக்கு வந்துள்ள வர்த்தமானி - நாடு முழுவதும் முப்படையினரையும் அனுப்ப தீர்மானம்

பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் பொருட்டு முப்படையினரை நாடு முழுவதும் அனுப்புவது குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கையொப்பத்துடன் நேற்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய நிர்வாக மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்மாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் மற்றும் நாட்டுக்கு உரித்தான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரை ஆகியனவும் இதில் உள்ளடங்கும். 

மேலும், கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, குருணாகலை, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொணராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களும் இதற்குள் உள்ளடங்கும். 

பொது சேவைக்காக குறிப்பிடப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவையும் நாட்டுக்கு சொந்தமான கடல்பகுதி உள்ளடங்கிய கடற்கரை ஆகியனவும் இந்த வர்த்தமானிக்குள் உள்ளடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தேர்தலுக்கு முன்பு இராணுவத்தினரை மக்கள் மத்தியில் அனுப்பி அச்சத்தையும் பயமான சூழலையும் ஏற்படுத்திதேர்தலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த 2015 ல் கோதபாயா போட்ட சதித்திட்டத்தை இம்முறையும் மைதிரியைப் பயன்படுத்தி தன்னுடைய சதித்திட்டத்தை இம்முறையும் சாதிக்கும் கோதாவின் சூழ்ச்சியாக இது அமையப்போகிறதா என பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பயமும் நிலவுகின்றது.

    ReplyDelete
  2. THIS IS A WELL PLANED EFFORT.THE THREE FORCES WILL NEVER ACT WITH OUT TAKING SIDES.MOST ORDINARY SOLDIERS ARE SUPPORTERS OF MAHINDA.THEY WILL INTIMIDATE PUT FEAR IN THE MIND OF MUSLIMS AND TAMILS OUT SIDE NORTH-EAST TO STOP THEM FROM VOTING.WE WILL HAVE TO AWAIT AND SEE WHAT WILL HAPPEN.

    ReplyDelete

Powered by Blogger.