Header Ads



மைத்திரிக்கு வலு இல்லை, கட்சியை அழிக்க வேண்டாமென உருகுகிறார் சந்திரிக்கா

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்க எடுத்த தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கடுமையாக சாடியுள்ளார்.

இந்தத் தீர்மானத்தினால் கடும் கோபமடைந்த சந்திரிக்கா, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாரிசிறி ஜயசேகரவுக்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சுதந்திர கட்சியை சேர்ந்த 90 வீதத்திற்கு அதிகமானோர், தாமரை மொட்டு கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளனர். இதற்கு சந்திரி்ககா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எப்படி கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க முடியும்? அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாக காட்டி கொடுப்பாகும்.

கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட தயார் என மைத்திரி குறிப்பிட்டிருந்தால், தலைமைத்துவத்தை ஏற்பதற்கும் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நாங்கள் ஆதரவு வழங்குவோம்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்தமையினால் பலவீனமடையவில்லை. எங்கள் தலைவருக்கு வலுவொன்று இல்லாமையே அதற்கு காரணமாகும். ராஜபக்சர்களின் சூழ்ச்சிகளுக்கு ஏமாற்றப்பட்டமையே கட்சி அழிய காரணமாகியது.

மைத்திரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு தைரியம் ஒன்றிருந்திருந்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கட்டியெழுப்பி சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்துவதற்கு இடமளித்து ராஜபக்சர்களின் கொலை மற்றும் கொள்ளை கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால், நாடு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்நேரம் மிகவும் பலமானதாக இருந்திருக்கும்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அதிகமாக நேசிப்பவர்கள் மற்றும் அறிந்தவர்கள் என்ற ரீதியில் நான் உங்களை அழைக்கிறேன். தாங்கள் தனிப்பட்ட தேவைக்கு மாத்திரம் மட்டுப்படாமல் எங்கள் பெறுமதியான கட்சியை அழிக்க இடமளிக்க வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.