Header Ads



"எமது நாட்டின் ஆன்மீகத் தலைவர் மஹிந்த ராஜபக்ச" - பசில்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டுகளின் தலையீடுகள் இருக்காது என்று முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெ ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைக்குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், தமது தோல்விக்கு பின்னால் இந்திய ரோ அமைப்பு இருந்ததாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

சீனாவின் ஆதிக்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்தமையே அதற்கான காரணம் என்று கூறப்பட்டது.

எனினும் தனிப்பட்ட ரீதியில் இந்தியாவின் தலையீடு இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என்று பெசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

வேறு எந்த நாடுகளையும் இது தொடர்பில் குற்றம் சுமத்தமுடியாது என்று அவர் ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் தவறு எங்கே இருந்தது என்பதை தாம் அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் தற்போது தவறுகள் திருத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் எப்போதும் இலங்கை, இந்தியாவுடன் பயணிக்கவேண்டியுள்ளது.. பொருளாதார ரீதியில் சீனாவை மறக்கமுடியாது. தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரச்சினைகள் இல்லை என்று குறிப்பிட்ட பெசில் ராஜபக்ச மஹிந்த ராஜபக்ச பிரதமராக அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவார்.

அதேநேரம் அவரே எமது தலைவர். அத்துடன் அவரே எமது நாட்டின் ஆன்மீகத் தலைவர் என்றும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மஹிந்த ராஜபக்ஸ ஓர் ஆன்மீகத் தலைவர் என பஸில் ராஜபக்ஸ தெரிவித்தாராம். அப்படியானால் தனக்குத் தெவையில்லை எனக் கருதிய வஸீம் தாஜிதீனைக் பட்டப் பகலில் கொலைசெய்தமை, கா லையில் வேலைக்குச்சென்ற லசந்த விக்ரமதுங்கவைக் கொலைசெய்ய கட்டளையிட்டமை உற்பட பல அரசியல் விரோதிகளையும் தனக்கு எதிரானவை எனக்கருதிய பத்திரிகை நிறுவனங்களை தீயிட்டுக்கொளுத்தியமை, அதிவேக பாதை, அந்தப் பாதை இந்தப் பாதை என நாடு முழுவதும் பாதைகள் அமைந்து குறிப்பாக ஹம்பாந்தோட்டையில் யானைக் காட்டிலும் கார்பட் பாதைபோட்டு கொமிசன் அடித்தமை அனைத்தும் இந்த ஆன்மீகத்தின் பின்புலமா என வாசகர்களாகிய எமக்குகேட்கத் தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.