Header Ads



முஸ்லிம் சமூகத்தின் நலன்களை, முன்னிறுத்தி 13 அம்ச கோரிக்கை

தமிழ் கட்சிகள் ஒருமித்து முன்வைத்துள்ள 13அம்ச கோரிக்கைகளை நிபந்தனைகளாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதை ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பாராட்டுவதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.  இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இம்மகத்தான முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது எமது பெருவிருப்பமும், பிரார்த்தனையும் ஆகும். அதே நேரத்தில் தமிழ் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தியவர்களாக இவ்விடயத்தில் தமிழ் கட்சிகளை பொது இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி அடைந்து உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழர் மாணவர் ஒன்றியங்களையும் நாம் வாழ்த்தி மகிழ்கின்றோம்.  

மேலும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பினராகிய நாம் எம்மை அழைத்து பேசிய தரப்பினருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்கு சிறுபான்மை மக்களின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தியவர்களாக 13 அம்ச கோரிக்கைகளை முன்நிபந்தனைகளாக முன் வைத்து அவர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தி, அவை தொடர்பாக அவர்களுடன் இரு சுற்று பேச்சு வார்த்தைகளை நடாத்தி, இப்பொழுது நிறைவு பேச்சுவார்த்தைக்கு தயாரான தருணத்தில் வந்து நிற்கின்றோம் என்பதையும் இத்தருணத்தில் பொருத்தப்பாடு கருதி அறிய தருகின்றோம்.   

No comments

Powered by Blogger.