Header Ads



எமது குடும்பத்தில், நான்தான் அப்பாவி - கோத்தபாய


தமது ராஜபக்ச குடும்பத்தில் தாமே மிகவும் அப்பாவியான நபர் என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கரும் இதனை தெரிவித்திருந்தார் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

தாம் கொடூரமான மனிதர் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும் தமது குடும்பத்திலேயே தாமே மிகவும் அப்பாவியான நபர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது கோத்தபாய இதனைக் குறிப்பிட்டதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாம் எவ்வளவு அப்பாவி என்பதனை தமது சகோதரர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடன் அரை மணித்தியாலப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் நீடித்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்களை கொடூரமான நபர் என சிலர் கூறிய போது நீங்கள் அவ்வாறு இல்லை என்பது புரிகின்றது என ஹானா சிங்கர் கூறிச் சென்றார் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Your looks APPAWI
    YOUR ACTING BEHAVING LIKE HITLER

    ReplyDelete
  2. இந்த அப்பாவி, பதவியில் இருக்கும்போது செய்த அட்டகாசங்களையும் ஆணவம் பெருமைப்பித்தால் பொதுமக்களும் ஏன் அரசியல்வாதிகளும் பட்டவேதனைகளும் தொந்தரவுகளும் இன்னும் அப்படியே ஞாபகமிருக்கின்றது. அப்பாவித்தனம் காரணமாகத் தான் முஸ்லிம் தமிழ் சிறுபான்பையைச்சேர்ந்த பணக்கார ர்களிடம் பலாத்காரமாக 2கோடி 5கோடி பணம் கப்பம் கேட்டு கொடுக்காதபோது கிடைப்பது சாவும் மீண்டும் திரும்பி வராத வெள்ளை வயன் யாத்திரையும் தான் என்பதை இந்த அப்பாவி மறந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.