September 03, 2019

''சிறிசேன''விற்கு மனசாட்சியோடு ஒரு பிறந்தநாள் வாழ்த்து....

1983 ஜூலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு - அவர்களின் சடலங்களை அங்கு புதைக்காமல் திட்டமிட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு - அந்த உடல்கள் புதைக்கப்பட்டதற்கு பிறகு தமிழர்களுக்கு எதிராக ஆரம்பித்த கலவரம் - இலங்கை வரலாற்றில் கறைபடிந்ததாக - அமைந்தது.

இந்தக் கலவரங்கள் நடைபெற்ற போது நாட்டில் சட்டம் ஒழுங்கு அமுலில் இருக்கவில்லை. கலவரம் நடக்கும் இடங்களில் இராணுவமோ பொலிஸாரோ இருக்காமலாக்கப்பட்டிருந்தது. லொரி லொரியாக குண்டர்கள் கொழும்பை நோக்கி தங்குதடையின்றி கொண்டுவரப்பட்டனர்.

தமிழர்களுக்கு சொந்தமான வீடுகள் வாக்காளர் இடாப்பை கையில் வைத்துக்கொண்டு தேடி தேடி உடைக்கப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமானவியாபார நிறுவனங்கள் உடைத்து கொள்ளையிடப்பட்டு எரிக்கப்பட்டது. நடுவீதியில் தமிழர்களை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி உயிரோடு தீயிட்டு கொளுத்தினர்.

இவையெல்லாம் நடைபெறுகின்ற போது இந்த நாட்டின் ஜனாதிபதி JR அமைதி காத்தார். அனைத்தும் நடக்கும் வரை அவகாசம் கொடுத்தார். அவரை யாராலும் தொடர்புகொள்ள முடியவில்லை. எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்கவே 72 மணிநேரம் அதாவது 03 நாட்கள் எடுத்தது. இத்தனைக்கும் அவர் நாட்டிலேயே இருந்தார்.

72 மணித்தியாலங்களின் பின்னர் இந்திய மற்றும் அமெரிக்க அழுத்தத்தினால் அவர் கலவரங்களை கட்டுப்படுத்தவேண்டிய கடடாயத்திற்கு ஆளானார். அதனால் நாட்டு மக்களுக்கு உரையொன்றை நிகழ்த்தினார். அதிலும் ஈவிரக்கமில்லாமலே பேசினார். அவருடைய உரையில் "சிங்கள இராணுவத்தை கொன்றால்; சிங்கள மக்கள் கைகட்டி பார்த்துக்கொண்டிருப்பார்களா?" என்று கர்வத்தோடு கேட்டார்.

ஆனால், ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு பிறகு - இலங்கையில் இடம்பெற சாத்தியமாக இருந்த 83 ஜூலை கலவரத்தை போன்றன ஒரு சூழலை சமாளிப்பதில் - உடனே செயற்பட்டவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணிலையும் - சற்று தாமதமானாலும் ஜனாதிபதி சிரிசேனவையும் நன்றி மனம் கொள்ளாமல் இருக்க முடியாது.

ரணில் குண்டு வெடித்த அன்றைய தினமே ஊடகங்களில் தோன்றி "இது ஒரு சிறு குழு செய்த காரியம்; இதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை குற்றம் கூற முடியாது" என்று பகிரங்கமாக நாட்டு மக்களை நோக்கி கூறினார். 02 தினங்கள் கழித்தாயினும் ஜனாதிபதி சிரிசேன தனது தேசிய உரையில் "ஒரு சிறு குழு செய்த காரியத்திற்காக; முஸ்லிம் சமூகத்தையே எதிரியாக யாரும் பார்க்க வேண்டாம்" என்று தெளிவாக கூறி இருந்தார்.

இருவரும் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தி வன்முறைகள் ஏற்படாமல் தடுத்தனர். என்ன நடக்கப்போகுதோ என்று பயந்து நடுங்கி வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த முஸ்லிம்களை பாதுகாத்தனர். சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நினைக்காமல் நாட்டின் தலைவர்களாக நிமிர்ந்து நின்றனர்.

72 மணி நேரம் அனைத்து வன்முறைகளும் நடந்தேற வழிவிட்டு அமைதிகாத்த JR எங்கே?

கலவரங்கள் நடந்து விடாமல் தடுக்க உடன் செயற்பட்ட ரணிலும் சிறிசேனவும் எங்கே?

ஒப்பிட்டு பாருங்கள்.

சிறிசேனவோடு எனக்கு அண்மைக்காலமாக அவ்வளவு பிடிமானம் இல்லை. ஆனால் JR யுடன் ஒப்பிடுகையில் அவரின் மேற்கூறிய கைமாறை நான் மறப்பதில்லை. என் மனசாட்சி அதற்கு வழிவிடுவதுமில்லை.

சிறிசேனவிற்கு இன்று பிறந்தநாள். அவரை ஜனாதிபதியாக இனி வாழ்த்த எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஒரு ஜூலை கலவரத்தை போன்ற கலவரத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தைக் காப்பதில் ஜனாதிபதியாக இருந்து பணியாற்றிய அவரை ஜனாதிபதியாக இருக்கும் போதே மனசாட்சியோடு வாழ்த்த என் மனம் நாடுகிறது.

I WISH U HAPPY BIRTHDAY Mr. PRESIDENT. 

GOD BLESS U

ஏ.எல். தவம் 

2 கருத்துரைகள்:

அப்போ Muslim களுக்கு எதிராக எந்த கலவரமும் இவர்கள் இருவரின் ஆட்சியிலும் நடக்கவில்லை என சொல்கிரீர்கல்.ஹிந்தோட்டை,அம்பாரை,கண்டி,கலவரங்களும் அழிவுகலும் எப்போது ஆங்கிலேயேரின் காலத்திலா நடந்தது.கண்டியிலும்,ஹிந்தோட்டையிலிம் சுமார் 24 மனி நேரமாக குண்டர்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடி தாக்கிய போது இவர்கள் இருவரும் எங்கே இருந்தார்கள்.இந்த அனைத்து கலவரங்களும் குண்டு வெடிப்புக்கு முன் நன்கு திட்டமிடப்பட்டு வெளிப்படையாக நிகழ்த்தப்பட்டது.குண்டு வெடிப்புக்கு பின் புத்தளம்,குருநாகல்,நீர்கொழும்பில் இடம் பெற்ர கலவரங்கள் இவை அனைத்தையும் ஜே.ஆர் மீண்டும் பிறந்து வந்து ஆட்சி செய்த போதா நடந்தது திரு.தவம் அவர்களே.

Appo Mr. Thavam neengalum ungada samoohamum muslimkalukku ethiraha pariya vanmurai onrai thoonda partheerhal pola, ungalathu nari, kaluhu oodahangalana satthi, sirasa, sooriyan ponra vesai oodahangalum appadiyana nasahara velaihalukke try panninarhal anal perumpanmai singala makkalukku theriyum April 21st thakkuthalin unmaiyana soothiratharihal yar enru neengalum ungalathu samoohamum 30 varudangalaha seeralitthatu ponru entha oru Muslim um intha nam ellarukkum sonthamana nattai oru nalaikkenum seeralikka orupothum enna mattan athuthan intha nattil muslim kalathu history. "Naam uruhi thondu seivom nam nadu sirakka"

Post a Comment