Header Ads



அமைச்சர்களின் தொடர்பில், சபாநாயகர் கவலை

பாராளுமன்ற உறுப்பினர்களின் கேளவிகளுக்கு அமைச்சர்கள் வருகை தராமல் இருப்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தனது கவலையை தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. ஆரம்பமாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று உறுப்பினர்களால் கேட்கப்படும் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் வருகை தராமல் இருப்பது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இது பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை கவலையுடன் தெரிவிக்கின்றேன். 

அத்துடன் இது தொடர்பாக  நேற்றைய தினம் சபை முதல்வரால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. இறுதியில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக செயற்குழு கூட்டத்தின்போது கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி, இணக்கப்பாட்டுக்கு வந்ததன் பின்னர் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனால் இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் நிகழாதவகையில் பார்த்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவ்வாறான நிலைமைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை ஒழுக்கத்தை பேணி செயற்படுவது அவசியமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதுதொடர்பில் கடந்த நான்கு வருடங்களாக திருப்பத்திரும்ப தெரிவிப்பதற்கு ஏற்பட்டமையையிட்டு நான் மிகவும் கவலைப்படுகின்றேன் என்றார்.  

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

1 comment:

  1. கௌவர சபாநாயர் அவர்களே! இது அவ்வளவு பெரிய விசயமன்று. பாராளுமன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறும் ஒரு அமைச்சரை ஆறு மாத த்துக்கு பாராளுமன்றத்தைத் தடைசெய்து அவர்களின் சம்பளம், சலுகைகள் அனைத்தையும் ஆறு மாதங்களுக்கு தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டு வாருங்கள். அப்போது பாரளுமன்றமும் வரவும் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லத்தேவையில்லை. ஆனால், பாராளுமன்றத்தில் குழப்பத்தைத் தூண்டி, அரசொத்துக்களை நாசமாக்கி அழித்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிளகாய்த்தூள் மூலமும் கதிரைகள் மூலமும் தாக்கி குழப்பத்தை ஏற்படுத்திய நாசகாரிகளுக்கு எதிராக இந்தப் பாராளுமன்றம் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதபோதுமேற்படி எமது வேண்டுகோளும் இடக்காதில் வாங்கி வலக்காதில் விடுவதுபோல்தான் இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.