Header Ads



ரணில் - சஜித் விடாப்­பிடி, தொடரும் இழு­பறியால் பங்­கா­ளிகள் அதி­ருப்தி

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வதில் இழு­பறி நிலைமை நீடித்­து­வ­ரு­கின்ற சூழலில் விரைவில் இந்த விவ­கா­ரத்துக்கு தீர்­வு­காண வேண்டும் என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சிகள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. பங்­கா­ளிக்­கட்­சி­களை உள்­ள­டக்­கிய  ஜன­நா­யக தேசியக் கூட்­ட­ணியை விரைவில் ஸ்தாபிக்க வேண்டும். 

என்றும் வேட்­பா­ளரை தெரிவு செய்ய வேண்டும் என்றும் பங்­கா­ளிக்­கட்­சிகள் வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்ற நிலை­யிலும் வேட்­பாளர் தெரி­வா­னது தொடர் இழு­பி­றி­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. 

ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்குள் வேட்­பாளர் தெரி­விலும் ஜன­நா­யக தேசியக் கூட்­டணி அமைப்­ப­திலும் நீடிக்கும் இழு­பறி முரண்­பாட்டு நிலைமை தொடர்பில் பங்­கா­ளிக்­கட்­சிகள் அதி­ருப்­தியில் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்ப்­ப­தாக இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தெரி­விக்­கா­வி­டினும் அவர் அந்த தீர்­மா­னத்தில் உறு­தி­யாக இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

அதே­போன்று கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­சவும் தாம் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றார்.  அவர் அதற்­கான அர­சியல் நகர்­வு­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்றார்.

சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வாக பதுளை மற்றும் மாத்­தறை பிர­தே­சங்­களில் இரண்டு கூட்­டங்கள் நடை­பெற்­றுள்ள நிலையில் எதிர்­வரும் 5 ஆம் திகதி குரு­ணா­கலில் மற்­று­மொரு கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.  இவ்­வாறு தனிப்­பட்ட ரீதியில் கூட்­டங்­களை நடத்த வேண்டாம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைமை அறி­வித்துள் ள நிலை­யிலும் கூட்­டங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. 

இந்த நிலை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் வேட்­பாளர் விட­யத்தில் விட்­டுக்­கொ­டுக்­காமல் இருக்­கின்ற சூழலில் இழு­பறி நிலை நீடித்து வரு­கின்­றது.

வேட்­பாளர் விட­யத்தில் கட்­சிக்குள் முரண்­பாடு நில­வு­வ­தாக கட்­சியின் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பகி­ரங்­க­மாக கூறும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்­றைய தினம் மாலை தீவுக்கு விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் அவர் நாடு திரும்­பிய பின்னர் வேட்­பாளர் விடயம் தொடர்பில் தீர்க்­க­மான முடி­வொன்று எடுக்­கப்­ப­டு­மென ஐக்­கிய தேசியக் டக்­சியின் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இந்த வேட்­பாளர் இழு­பறி நிலை கார­ண­மாக பாங்­க­ளி­கட்­சி­களை உள்­ள­டக்­கிய ஜன­நா­யக கூட்­ட­ணியை ஸ்தாபிப்­ப­திலும் தாமதம் நிலவி வரு­கின்­றது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரிவு செய்­யப்­பட்ட பின்­னரே  ஜன­நா­யக கூட்­டணி நிறு­வப்­பட வேண்­டு­மென சஜித் பிரேமதாஸ தரப்பு கூறிவருகின்றது. ஆனால்  ஜனநாயக கூட்டணி நிறுவப்பட்டபின்னரே வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு கூறிவருகின்றது. இந்தப் பின்னணியிலேயே வேட்பாளர் விடயத்தில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் தொடர்ந்ரும் முரண்பாடுகள் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Fantastic if Ranil contests instead of Sajid. Anti Gota votes won’t get split between Anura and Sajid. Anura will grab all anti Gota votes and Ranil will finish as also ran.

    ReplyDelete

Powered by Blogger.