Header Ads



3 இலட்சம் வாக்குகளை முஸ்லிம் வேட்பாளர் எடுத்தால், ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தியாகலாம்..!

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடுவது ஜனாதிபதியாவதற்காக அன்றி ஜனாதிபதி யார் என்று தீர்மானிப்பதற்காகவே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,

ஜனாதிபதியாவதற்காக முஸ்லிம் வேட்பாளர் போட்டியிடத் தேவையில்லை. ஜனாதிபதியை தீர்மானிப்பதற்காகவே போட்டியிட வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் நான்கு

கட்சிகள் போட்டியிட்டால் கடும் போட்டியிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 50 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டும் வெளியேறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசாவை வேட்பாளராக நிறுத்தினால் அதுவும் போட்டியாக இருக்கும்.

மற்றய தரப்பில் கோத்தாபய ராஜபக்ச, அதே போன்று அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுவார்கள். இதனால் தேர்தல் கடும் போட்டியாக இருக்கும்.

இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்திலும் பிரசாரங்களை செய்து இலங்கையிலுள்ள முஸ்லிம் வாக்குகள் அனைத்தையும் பெற முயற்சிக்க வேண்டும்.

ஆகக் குறைந்தது மூன்று இலட்சம் வாக்குகளையாவது அந்த முஸ்லிம் வேட்பாளர் எடுத்தால் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக மாற முடியும். அதனால் தான் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என்று நான் முன்மொழிந்துள்ளேன்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 வீதமான வாக்குகளை பெற முடியாத சூழ் நிலை வருமாக இருந்தால் முஸ்லிம் சமூகத்தினுடைய வாக்குகள் ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும்.

நாட்டில் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பாரிய சதிகள் தொடர்வதைத் தடுக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

7 comments:

  1. Consider the opinions of other leading Muslim politicians and Let all you come to a decision before finalizing. If not Every one will go in their own and different directions. This will weaken Muslims vote strength.

    ReplyDelete
  2. Estimated votes(81%)casting votes=13,300000
    Buddhist votes=(70%)=9,310000
    Minority’s votes(30%)=3,990000
    ...............................
    From=(100%)=13,300000
    Possible errors may happens

    Gotta(48%)=6,3840000
    JVP(6%)=798000
    SLFP MY3 (9%)=1,197000
    UNP(37%)=4,927000
    SLFP MY3 2nd preferred candidate most will go to Gota, if Sajith Premadasa contested with MY3 support then UNP will get 46% plus 2nd preferred go to Sajith UNP. May be reached to get over 50%.
    If Muslim candidate gives more chance towards Gottas win.
    If Muslim candidate contested needs do a deal with Gotta. Not UNP.

    This is my analysis marginal errors need to be eliminated.

    ReplyDelete
  3. தலைவர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஆலோசனை மிகவும் காத்திரமானது. இதுவரை காலமும் எந்த முஸ்லிம் தலைவர்களுக்கும் உதிக்காத யோசனை. பெரும்தலைவர் அஷ்ரப் அவரகளின் காலத்தில்கூட இத்தகைய சிந்தனை ஏற்பட்டிருக்கவில்லை. இதுவரை காலமும் முஸ்லிம்கள் பல்வேறு கொள்கைகளின் அடிப்படையில் பிரிந்து இருந்தமையின் காரணமாகவே சற்று முன்னர் முகவரியற்றவர்களின் கைகளினால் குட்டு வாங்கினோம். இந்த முயற்சியின் மூலமாக எம் தனித்துவத்தைப் பேணக்கூடிய முஸ்லிம்கள் எத்தனை பேர் இருக்கினறார்கள் என்ற மதிப்பீட்டினையும் அறிந்து கொள்ள முடியும். இப்படியான ஆலோசனையொன்றை எம்மத்தியில் முன்வைப்பதற்கு ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு சகல தகுதிகளும் இருக்கின்றன. நாட்டின் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அதிமுக்கிய புத்திஜீவிகள் உலமாக்கள் பள்ளித்தலைவர்கள் சட்டத்துறையினைச் சார்ந்தோர் மற்றும் மாவட்ட மட்டத்திலுள்ள தலைவர்கள் இளைஞர்கள் ஆகியோருடன் இந்த குறிப்பிட்ட காலத்தினுல் பேச்சு வார்த்தையினை நடாத்தி தீர்க்கமான முடிவொன்றிக்கு வரவேண்டியது தலைவர் அவர்களினதும் அவர்களது ஆலோசகர்களினதும் தலையாய கடமையுமாகும். குறித்த இலக்கினை அடையக்கூடிய சாத்தியக்கூறு இருந்தால் மாத்திரமே இத்துணிகர முயற்சியில் இறங்குதல் வேண்டும்.

    ReplyDelete
  4. JVP 2nd preferred vote goes to UNP

    ReplyDelete
  5. Estimated casting votes(81%)=13,300000
    Buddhist votes=(70%)=9,310000
    Minority’s votes(30%)=3,990000
    ...............................
    From=(100%)=13,300000
    Possible errors may happens

    Gotta(48%)=6,3840000
    JVP(6%)=798000
    SLFP MY3 (9%)=1,197000
    UNP(37%)=4,927000
    SLFP MY3 2nd preferred candidate most will go to Gota, if Sajith Premadasa contested with MY3 support then UNP will get 46% plus JVP 2nd preferred go to Sajith (UNP)May reached to get over 50%.
    If Muslim candidate gives more chance towards Gottas win.
    If Muslim candidate contested needs do a deal with Gotta. Not UNP.

    This is my analysis marginal errors need to be eliminated.

    ReplyDelete
  6. @Peace lover: Do not underestimate UNP. They have equal talent with Gotta. Political environment changes from time to time. Might be no-one will get more than 43% to my assessment. Its depend on the side-taking of SLFP. Then the percentage will increase but never goes more than 45%. All these are just speculations. Will see what will happen and the stand of the Muslim community.

    ReplyDelete
  7. @ Shuhood MIY I mentioned marginal errors need to be eleminated. You may be right. But If you look at last presidential election 2015 Mahinda got 47.58% there is a high chance of possibility even go to up to 50% Allah knows best. According to Sinhalese and Catholic floating voter even Tamil in the up country. More mind changes happened after the Easter incident.

    So UNP and other alliances need to work hard.

    ReplyDelete

Powered by Blogger.