September 01, 2019

ரணிலின் உத்தரவையும் எச்சரிக்கையையும் மீறி, 5 ஆம் திகதி குருநாகலில் சஜித் ஆதரவு கூட்டம்

- ஆர்.ராம் -

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்கு வெளியில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­க­ளையோ, கருத்­துக்­க­ளையோ வெளிப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­களை மீறி  சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்­கு­வ­தற்­கான மாபெரும் மக்கள் ஆத­ரவுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குரு­நா­கலில் திட்­ட­மிட்­ட­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியில் உள்ள அவ­ரது ஆத­ரவு அணி­யினர் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளனர். 

முன்­ன­தாக, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கும் கட்­சியின் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சில­ருக்கும் இடையில் விசேட சந்­திப்­பொன்று கடந்த புதன்­கி­ழ­மை­யன்று இரவு  அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் இராப்­போ­சன விருந்­து­ப­சா­ரத்­துடன் இடம்­பெற்­றது. 

இந்த கலந்­து­ரை­யா­டலில் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ,கட்­சியின் தவி­சாளர் அமைச்சர் கபீர் ஹாசீம், முன்னாள் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ரம உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் பலர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது பல­வி­ட­யங்கள் பேசப்­பட்­ட­தோடு, அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வது  குறித்து  அடுத்த மக்கள் கூட்டம் எதிர்­வரும் 5ஆம் திகதி குரு­நா­க­லையில் நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அடுத்­த­கட்­ட­மாக மேற்­கொள்­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தோடு ,அசோக அபே­சிங்­க­விடம் அதற்­கான பொறுப்பும் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை வர­வ­ழைத்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­படும் வரையில், ஒரு­ந­பரை ஆத­ரித்து பொது­வெ­ளியில் கூட்­டங்­களை நடத்­தக்­கூ­டாது, கட்­சியின் உறுப்­பி­னர்­களை அழைத்து இர­க­சிய சந்­திப்­புக்­களை நடத்­தக்­கூ­டாது, குறித்த நப­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு பிற அர­சியல் கட்­சி­க­ளுடன் இர­க­சிய பேச்­சுக்­களை நடத்­தக்­கூ­டாது, மாவட்ட ரீதி­யான மக்கள் கூட்­டங்­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை உடன் நிறுத்த வேண்டும் உள்­ளிட்ட பல்­வேறு உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தி­ருந்தார். 

அத்­துடன், ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கள­மி­றக்­கப்­படும் வேட்­பாளர் பாரா­ளு­மன்ற குழு­வி­னதும், மத்­திய செயற்­கு­ழு­வி­னதும் அங்­கீ­கா­ரத்­து­டனும் முன்­மொ­ழி­யப்­படும் எனவும் அடுத்த கூட்­டத்­தினை எதிர்­வரும் ஆறாம் திகதி கூட்­டு­வ­தற்கும் இதன்­போது ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் இறுதி வரை­வினை ஆராய முடியும் என்றும் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­த­வர்­க­ளி­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­ய­தாக அறிய முடி­கின்­றது. 

மேற்­படி பிர­த­மரின் உத்­த­ர­வு­க­ளுடன், ஏற்­க­னவே சுஜீவ சேர­சிங்க மற்றும் அஜித் பீ பெரே­ரா­வுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், அமைச்சர் ஹரீன் பெர்­னாண்­டோ­வுக்கு பிர­தமர் நேர­டி­யா­கவே எச்­ச­ரித்­தி­ருந்த நிலை­யிலும் சஜித்தை ஐ.தே.கவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பெய­ரி­டு­வ­தற்­காக எதிர்­வரும் ஐந்தாம் திகதி குரு­நா­கலில் நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்ட மாபெரும் மக்கள் கூட்­டத்­தினை ஒத்­தி­வைப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. 

எனினும் கட்­சித்­த­லை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உத்­த­ர­வு­க­ளையும், எச்­ச­ரிக்­கை­க­ளையும் கடந்து திட்­ட­மிட்­ட­படி குரு­நா­கலில் சஜித் ஆத­ரவு மக்கள் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. 

குறித்த மக்கள் கூட்­டத்தின் ஏற்­பாட்­டா­ள­ராக இருக்கும் இரா­ஜாங்க அமைச்சர் அசோக் அபே­சிங்க கூறு­கையில், ஐந்தாம் திகதி திட்­ட­மிட்­ட­படி எம­து­கட்­சியின் பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாஸ ஆத­ரவு மக்கள் கூட்டம் குரு­நா­கலில் நடை­பெ­ற­வுள்­ளது. எமது கட்­சியின் தலைவர் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியபோது சில உத்தரவுகளை பிறப்பித்ததாக அறிய முடிகின்றது. 

எனினும் அதுபற்றி எமக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை. தற்போது பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த மக்கள் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ஹரீன் பெர்னாண்டோ, உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குருநாகல் நகரில் பிற்பகல் 2.30இற்கு மக்கள் பேரணியுடன் ஆரம்பமாகவுள்ளது என்றார். 

0 கருத்துரைகள்:

Post a Comment