Header Ads



நிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்

காலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று  குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வந்தார்கள் என்பதற்காக கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அமுலில் இருந்த அவசரகால சட்டத்தின் கீழ், முகம் மூடும் விதமாக ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. 

எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதிக்குப் பின்னர் அவசரகால சட்டம் தளர்த்தப்பட்டது. ஆனாலும் முகம் மூடும் சட்டம் தளர்த்தப்பட்ட விடயத்தில் இன்னமும் குழப்பங்கள் நீடித்து வருகிறது.

அந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் முன்னாள் மேல் மாகாண மாகாண ஆளுநர் ஆசாத் சாலியின் தலையீட்டில் அவர்கள் பெண் போலீஸ் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதன் பின்னர் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டு விடுவிக்கப்பட்டனர்.

utv

7 comments:

  1. முகத்திரை போட்டதால் கைது செய்ய பாதுகாப்பு தரப்பினரிடம் சட்டரீதியாக எந்த ஆவாணமும் கிடையாது.

    பாதுகாப்பு காரணத்திற்காகா ஆளை உறுதிப்படுத்துவதற்காகா விசாரணைக்காகா அழைத்து செல்லவே அதிகாரம் உண்டு.

    எனவே, உரிமையை பாதுகாக்கும் முயாற்சியோடு, அதை பறிபோகாமல் பாதுகாக்காவும் முயற்சிப்போம்.

    இருப்பினும்,
    மேற்படி ஒரு சில சம்பவங்களால்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள இக்குழப்பத்திற்கு பாதுகாப்பு தரப்பினால் தெளிவு கொடுக்கப்படும்.

    பொறுமையோடு இருப்போம்,உரிமையை மீட்டெடுப்போம். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. இப்படி ஒரு நிலைமை ஏட்படும் என்று நான் எந்தினையோ முறை எழுதி இருக்கிறேன். ஆனால் துரதிஷ்இடவசமாக சிலர் என்னையும் விமர்சித்தார்கள்.

    யாரும் பார்க்கக்கூடாது என்று முகத்தை மூடியவர்களை கைது செய்த போது கூடிநின்ற அனைவரும் வேடிக்கை பார்த்திருப்பார்கள். கடட்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டபோது அங்கேயும் அனைத்து சிப்பாய்களும் நக்கலோடு பார்த்திருப்பார்கள் அதன் பின் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டபோது நாய் கூட்டில் இருந்தவர்களும் நக்கலாக பார்த்திருப்பார்கள்.

    இந்த சீரழிவு தேவைதானா? சாதார உடையில் இருந்திருந்தால் தெரு நாய்கள் கூட திரும்பிப் பார்த்திருக்காது.

    ReplyDelete
  3. Mr sihabdeen...
    கிணற்றுத்தவளையாக இல்லாமல் நாட்டு நடப்புக்களை புரிந்து பேசுங்கள்.

    உண்மையில் அந்த பெண்கள் பாதுகாப்பு தரப்பால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை ஒரு வித நலவே!!!

    ஏனெனில், இந்த சம்பவத்தின் பின்னர்தான் பாதுகாப்பு தரப்பினரை நிகாப் தொடர்பாக தெளிவான வெளியிடுமாறு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன,
    அவர்களும் தெளிவுவடுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    அத்தோடு, அவசர கால சட்டத்தில் முகம் மூடிய குற்றத்தில் கைது செய்யப்பட்ட புத்தளப் பெண்ணிற்கு சட்டரீதியாக எடுக்கப்பட்ட கைது போல இப்பெண்களை சட்டரீதியாக தண்டனை வழங்க அதிகாரம் இல்லாமல் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை நாட்டு மக்களுக்கு ஒரு தெளிவை கொண்டு வந்துள்ளது.

    பல்லாயிரக்கணக்கான பெண்களின் உரிமையை உத்தரவாதப் படுத்த குறித்த 4 பெண்களின் பொறுமை என்பது சமூகத்தின் சேவையாகவே நோக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  4. ஆசாத் சாலி இல்லை என்றால் இந்த பெண்களின் நிலைதான் என்ன?

    ReplyDelete
  5. Abdulla Kky: குழப்பத்தை உண்டாக்கி அதன் பின் விளைவுகளை அறிந்துகொள்வது நல்லது என்றல், காவல்துறைக்கு பதிலாக காடையர்கள் கூட்டமாக சேர்ந்து, அபாயங்களை கழட்டி வீசி வேறேதும் அநியாயங்கள் செய்திருந்தால் அதட்கு நீங்கள் பொறுப்பு எடுப்பார்களா??

    சட்டம் உள்ள நாட்டில் சட்டத்தை பற்றி பேசலாம். முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்தபோது நீங்கள் செவ்வாய் கிரஹத்திலா இருந்தீர்கள்?? நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் மனைவி , மகளுக்கு முகத்தை மூடி, காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு வந்து பாருங்களேன்!! நீங்களும் எமது சமூகத்துக்கு ஒரு சேவை செய்ததாக இருக்கட்டுமே!!

    ReplyDelete
  6. நிகாப் அணிவது பர்ளான விடயமா?.ஒரு சிலரின் இந்த பிடிவாத போக்கினால் நல்ல சிங்களவர்கள் கூட மொத்த முஸ்லிம்களின்மீதும் வெறுப்படைய தொடங்கியுள்ளது தெரியுமா?.நாயகம்(ஸல்) காலத்தில் முகத்தை மூடிய பெண்கள் உல்லாசமாக Beachக்கெல்லாம் சென்றிருப்பார்களா?

    ReplyDelete
  7. The whole purpose of Hijab & Niqab are to reduce unwanted attention of the opposite sex. If these attires bringing extra attention and instead of protecting women, putting them in danger and letting our sisters to undergo harassment, we should really question the use of these garments. If Islam is a peace loving religion & if anything is disturbing the peace of the country, its our responsibility to come forward and be a role model citizens rather than troubling the security forces by wearing dresses which hides ones identity. Our Brs needs to take a broadminded approach in this matter.

    ReplyDelete

Powered by Blogger.