August 13, 2019

இலங்கை வர­லாற்றில் முதல்முறை­யாக அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை கொண்டவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி

இலங்கை வர­லாற்றில் முதல் முறை­யாக அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை கொண்ட ஒருவர்  ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­கிறார். இவ்­வாறு சென்றால் எதிர்­கா­லத்தில் பிரித்­தா­னியர் ஒரு­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கி­விடும் என்று சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

வேளாண்மை மேற்­கொள்ளும் மக்­களை மையப்­ப­டுத்தி முன்னாள் ஜனா­தி­பதி ஆர்.பிரே­ம­தாச மற்றும் டி.பீ.விஜே­துங்க உள்­ளிட்டோர் தமது பய­ணங்ளை ஆரம்­பித்­தது ஐக்­கிய தேசிய கட்­சியில் தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது என்றும் அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

2300 மில்­லியன் செல­வீட்டில் மக்கள் மயப்­ப­டுத்­தப்­பட்ட மத்­து­கம - அளுத்­கம பாதையை ஒன்­றி­ணைக்கும் புதிய பாதை திறப்பு விழா நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதில் பங்­கேற்­ற­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

2015 ஆம் ஆண்­டையும் விட மிக வளர்ச்­சி­ய­டைந்த மக்கள் சேவையில் அர­சாங்­கம் ­ப­ய­ணிக்கும்போது தான் தற்­போது ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்­ளது. கடந்த காலங்­களில் நடை­பெற்ற மாபெரும் மக்கள் சார்ந்த அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களில் சர்­வ­தேச ரீதியில் தற்­போ­துள்ள அர­சா­னது அங்­கீ­கா­ரத்­துடன் திகழ்­கி­றது. மக்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வித­மான நலன்­க­ளையும் கருத்­திற்­கொண்டு செயற்­படும் எமது அர­சாங்கம் நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் வர­லாறு காணாத வகையில் அபி­வி­ருத்தி பாதையில் பய­ணிக்­க­வி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டு நாம் சிறந்த தீர்­மா­னத்­திற்குள் உள்­வாங்­கப்­பட்டு, ராஜ­ப­க் ஷ­வின்­அ­ர­சுக்கு எதி­ராக ஓர் ஒன்­றி­ணைந்த தீர்­மா­னத்­திற்கு தள்­ளப்­ப­டுவோம். அதன் விளை­வாக, ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மையில் பொது வேட்­பாளர் ஒரு­வரை  நிய­மித்தோம். அத்­துடன் 80ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் ஓர் தேசிய அர­சாங்­கத்­தினை நிர்­மா­ணித்து உட்­பி­ர­வே­சித்தோம். அந்த காலத்தில் பஷில் நாட்டில் இருந்து தப்­பி­யி­ருந்தார் அவ்­வாறு இருந்த காலத்தில் நாம் பொதுத்­தேர்­த­லுக்கு முகம் கொடுத்தோம் என்­பது எமது வெற்­றியின் மூலம் நிரூபணம் ஆகி­யி­ருக்­கின்­றது. அந்­தந்த கால கட்­டத்தில் நாம் கட்­சியின் வெற்­றியை விட நாட்டின் வெற்­றிக்­கா­கவே உழைத்‍தோம். அதுவே இப்­போ­துள்ள சுபிட்சம் கிடைக்­கப்­பெ­று­வ­தற்கு வாய்ப்­பாக இருந்­தது. பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் அங்­கத்­த­வர்கள் அர­சாங்­கத்­திற்குள் பிர­வே­சிக்கும் போது அர­சாங்­கத்தை பல வழி­களில் உதா­சீ­னப்­ப­டுத்­தினர். இதனால் அர­சாங்கம் பல சோத­னைக்குள் தள்­ளப்­பட்­டது.

குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கு­வ­தற்கு இய­லா­மை­யினால் தற்­பொ­ழுது அவர்­களும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­றனர். அதனால் பழை­ய­வற்றை மறந்து மேலும் மஹிந்­தவை பின்­பற்ற தயா­ரா­கின்­றனர். அவ்­வ­கை­யான செயற்­றிட்­டங்­களை மேற்­கொள்ள நல்­லாட்சி அர­சுக்கு முடி­யாது.

கடந்த அர­சினால் பெறப்­பட்ட கடன்­க­ளையும் மீள செலுத்­திக்­கொண்டே அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை முக்­கிய அம்­ச­மாகும். இல­வச கல்­வி ­மற்றும் சுகா­தா­ரத்­திற்கு அதிக நிதி ஒதுக்­க­ப்பட்­டுள்­ளதும் நல்­லாட்சி அர­சில்தான் என்­பதும் முக்­கிய அம்­ச­மாகும். இத­னூ­டா­கத்தான் சர்­வ­தேசம் நம்மை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. சர்­வ­தே­ச­மா­னது எமது பிரச்­சி­னை­களை செவ்­வனே அறிந்து வைத்­துள்­ளது. மருந்துப் பொருட்­களின் விலை குறைப்பு, ஸ்டென்ஸ், லென்ஸ் (கண்) என்­ப­னவும் போதிய அளவில் இலங்கை மக்­க­ளுக்கு சேவை அடிப்­ப­டையில் வழங்குவதை­யிட்டு சுகா­தா­ரத்­துறை பெரு­மிதம் கொள்­கி­றது. அவை அனைத்­தும் செய்­தது ஏழை மக்­க­ளுக்­கா­கவே.

இவ்­வா­றி­ருக்­கையில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இவ்வாறு சென்றால் எதிர்காலத்தில் பிரித்தானியர் ஒருவரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தவிர்க்கமுடியாததாகிவிடும். அவற்றை நிராகரித்து 2015ஆம் ஆண்டை விட பலம் பொருந்திய ஓர் அரசாங்கத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

1 கருத்துரைகள்:

Better to give the country back to British. We don't need this Shit Independence...
Except from very few good people..We got nothing from these Sinhalese stupid politicians. Our country is going to hell now..
British Please come and take us back..

Post a comment