Header Ads



பொதுக் கூட்டங்களை நடத்தி, ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவுசெய்ய முயற்சிப்பது கேலிக்குரியது

பொதுக் கூட்டங்களை நடத்தி, அதன் மூலம் ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்ய முயற்சிப்பது கேலிக்குரியது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

எத்தனை பொதுக் கூட்டங்களை நடத்தினாலும் அவற்றின் மூலம் தலைவர்கள் உருவாவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சிறந்த யாப்பை கொண்டுள்ள கட்சி.

அந்த யாப்பிற்கு அமைய செயற்பட வேண்டியது கட்சியின் அனைவரதும் பொறுப்பு.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் போது நாட்டின் சிறிய கட்சி எவ்விதமாக நடந்து கொள்ளும் என்பது தொடர்பாக என்ற சிறந்த புரிந்துணர்வுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக கட்சியின் நாடாளுமன்ற மற்றும் செயற்குழு கூடும் போது, சிறிய கட்சிகளின் கருத்துக்கள் தொடர்பாக சிறந்த புரிந்துணர்வு செயற்படுவது தேர்தல் வெற்றிக்கு முக்கியமானது என வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க கோரி, அந்த கட்சியினர் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். பதுளை மற்றும் மாத்தறை வெற்றிகரமான இரண்டு கூட்டங்களை அவர்கள் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.