August 01, 2019

5 மில்லியன் டொலர்களை, அள்ளிக்கொடுத்தமைக்கு நன்றி கூறினார் ரணில்

உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும் சர்வதேச பாடசாலைகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி முஹமத் பின் அப்துல்லா கரீம் அல் இஷா Dr. Mohamed bin Abdullah Karim al-Issa தலைமையிலான குழுவினருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

அலரி மாளிகைளில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது நாட்டில் சமய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பயங்கரவாதிகளை கைது செய்வதற்கும் நாட்டின் நிலைமையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பில் இதன்போது பிரதமர் தெளிவுபடுத்தினார். 

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் சகவாழ்வை கட்டியெழுப்ப தான் முன்னின்று செயற்படுவதாக உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். 

இந்த விஜயத்தின்போது மகாநாயக்கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தததாக அவர் கூறினார். 

இதேவேளை தாக்குதலினால், பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கம் நிதியத்திற்கு ஐந்து மில்லியன் டொலர்களை வழங்க இதன்போது உலக முஸ்லிம் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மற்றும் சர்வதேச பாடசாலைகள் அமைப்பின் தலைவரும் பொதுச் செயலாளார் நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய இலங்கைக்கு வருகை தந்தமையையிட்டு பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

6 கருத்துரைகள்:

Sri Lanka Muslim களை அரபு நாடுகள் கனக்கெடுப்பதில்லை என இங்கே பதிவிட்ட சில தமிழ் இனவாதிகலுக்கு அரபு நாடுகள் அல்ல உலக Muslim நாடுகளின் தலைவரே நேரடியாக களத்தில் இறங்கியது இந்த இனவாதிகலுக்கு மிகப் பெரும் செருப்படி

Yes Rizard
தமிழர் மாத்திரம் அல்ல எமது சில முஸ்லிம் புத்தி (சீவிகளும்) இப்படி தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

அதை எல்லாம் விடுங்க ரிஷாத் தம்பி. 500 மில்லியன் என்கிறது அவங்களுக்கு கொசு விரட்ட use பண்ணும் பணம். அது சரி நம்மட friends அனுஸ் அஜன் என்ன ஆட்களையோ காணோம். ஒரு முஸ்பாத்தியும் இல்லை.

5 மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இருக்கும் வித்தியாசம் கூடத்தொியாமல் கருத்துச் சொல்ல வந்திருக்கும் அடிமுட்டாள்களை நினைத்தால் வருத்தமாகவுள்ளது.

Suhood bro உண்மைகள் தற்போது வெளிவந்து நீதி வெளியே தெரிவதனால் ajan,anush எங்கோ ஒரு மூலையில் பதுங்கி விட்டார்கள்.ஏன் நம்ம ஜெயபாலன் ஜயா கூட குண்டு வெடிப்பு இடம்பெற்ற வேளையில் இருந்து அதிகமாக பதிவுகளை தினமும் இடுவார்.ஆனால் எம் சமுகத்தின் மீதான போலிக் குற்றசாட்டுக்கல் சாயம் போக ஆரம்பித்ததும் ஜெயபாலன் ஜயா கூட தற்போது அமைதியைகி விட்டார்.

Post a comment