Header Ads



Dr ஷாபி குறித்த விஷேட அறிக்கையை, நாளை சமர்ப்பிக்கவுள்ள CID - பாதுகாப்பு தீவிரம்


(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவு வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி  தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்றினை சி.ஐ.டி. நாளை -11- குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளது. 

வைத்தியர் ஷாபி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளை குருணாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வரும் நிலையிலேயே இந்த விஷேட விசாரணை அறிக்கையை முன்வைக்க  சி.ஐ.டி. தீர்மனைத்துள்ளதாக நான்காம் மாடித் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக நாளைய விசாரணைகளின் போது,  முதன் முறையாக வைத்தியர் ஷாபி நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அறிய முடிகின்றது. இது தொடர்பில் விஷேட பாதுகாப்பு கட்டமைப்பொன்றினை அமுல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் சி.ஐ.டி. முன்வைக்கவுள்ள விஷேட அறிக்கையில் பிரதானமாக மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

No comments

Powered by Blogger.