July 31, 2019

இலங்கை முஸ்லிம்களுக்கான, படு பயங்கரமான சமிக்ஞை

கடையை மூடிவைத்தால் கூரையினை பிரித்துக்கொண்டு இறங்குவதற்கான வழியை திறந்து வைக்கிறோம்!

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதற்கு எதிரான தடை அவசரகாலச்சட்டத்தின் கீழ் அமுலில் இருக்கின்ற நிலையில் அதனை நிரந்தரமான சட்டமாக்குவதற்கான பிரேரணையொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது படு அபாயகரமான சமிக்ஞையாகும்.

முகத்தை கட்டாயம் மூடவேண்டுமா? இல்லையா? என்பதில் மார்க்க அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும், நிலையற்ற நிலைப்பாடுகளும் காணப்படுகின்ற நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலைகளை உணர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் தாமாக இதுபற்றி ஒரு நிலைப்பாட்டிற்கு வரவேண்டிய அவசியமும் நிலவுகின்றது.

அதேவேளை இது வரை முஸ்லிம் பெண்கள் அனுபவித்து வந்த அவர்களது தனிப்பட்ட ஆடை ஒழுங்கு தொடர்பான விருப்பம்/ உரிமை அரசியல் ரீதியாக நிரந்தர தடையினை எதிர்நோக்குவது எந்தவகையிலும் ஏற்க இயலாத விடயம்.

இதனை இலங்கை முஸ்லிம் சமூகம் அமைதியாக அங்கீகரிக்கும் நிர்ப்பந்தம் உருவானால் பிறகு மிக அடிப்படையான மார்க்கம் சார்ந்த உரிமைகளை இது போன்றே இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைகள் தோன்றவும் வாயப்புகள் வந்துவிடும்!

மீண்டும் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது காட்டமான எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களில் எழுந்திருக்கின்ற நிலையில், சமகாலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பின்னப்படுகிற சதிவலைகளை “சக்தியோடு” எதிர்கொள்ள உரிய இடங்களில் முஸ்லிம் பிரதிநிதிகளின் பிரசன்னம் கட்டாயமாகிறது என்ற யதார்த்தத்தினையும் விமர்சகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அமைச்சரவையில் எமக்கு எதிராக யாரவது ஒரு இனவாதியால் பிரேரணையொன்றை முன்வைக்க முடிகிறபோது அதனை வலுவாக எதிர்க்க அங்கே நான்கு பேராவது பிரசன்னமாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

பதவிகளை துறப்பது, தூக்கி வீசுவதெல்லாம் வெறும் உணர்ச்சிகளை மையப்படுத்தியதாக மட்டுமல்லாமல் சூழ்நிலைகளின் தேவைகருதியதாக இருக்கவேண்டும்.

இலங்கையின் சம கால அரசியல் சதுரங்கம் கடும் சிக்கலானது. அது வெளியில்/ வெளிநாடுகளில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் விமர்சனம் எழுதுவதை போல இலகுவானது அல்ல.

நான்கு நாட்களுக்கு உங்களது சொந்தக்கடைக்கு போகமுடியாவிட்டால் ஐந்தாவது நாள் வேலை செய்கின்றவன் மொத்த கடைக்கும் ஆட்டையை போட்டு விடுவானென்ற பயம் இருப்பதை போல இலங்கை முஸ்லிம் அரசியலில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிற தலைவர்கள் நாள்தோறும் கண்களுக்குள் எண்ணெயினை ஊற்றிக்கொண்டு விழித்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்பிலும், ஜம்இய்யதுல் உலமா சபையினை பற்றியும் கட்டற்ற கருத்தியல்களை சகட்டு மேனிக்கு அடித்து விடாமல் கொஞ்சம் நிதானங்கொள்வது சமகால சூழலுக்கு நல்லதெனப்படுகிறது.

Mujeeb Ibrahim

6 கருத்துரைகள்:

Why struggle for some alien tribal customs which is harmful to National unity in the long run.

Dear Peace, don't comment against niqab because of your family members not wearing. Think about others well. No point in keeping the name as peace. Try be a peace lover

I’m strongly against face covering, however whatever the religious either pro or anti opinions have to be resolved within our community. We should never give space to be dictated by outsiders. Though we’re a minority community, we’re not slaves in this country.

I strongly suggest our youth to take a serious interest to peruse their studies in international relationship, Political Science and mass media (Ideally in sinhala language) along with you should mastered with a foreign languages.. all happen for a good reason.

I as a Sri Lankan niqab wearing lady feel it’s men deciding our dress code. It’s our choice if we cover or not as per our religious belief. We niqab Iadies should be consulted before put forwarding any resolutions regarding it by Muslim politicians or scholars. For changes in MMDA how much these scholars and others are against ,why bcoz that affects them in either way they marry two or three , marry girls below 18 etc When it comes to our ladies rights they are dumb.
Wake up my dear niqabi sisters it’s high time we demand our rights without waiting for these so called Worldly greedy Mufthis giving Fatwas as per their wish n whims and make our rights taken away.

Post a Comment