Header Ads



றிசாத் பதியுதீனுக்கு எதிராக, மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை

- கி.தவசீலன் -

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், றிசாத் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று கூறினார்.

எனவே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ள றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.

3 comments:

  1. இந்த நாயே அடிச்சி தெறதுங்கோ சார் , ஒங்களுக்கு புண்ணியமா போகும் !

    ReplyDelete
  2. உதயகம்மன்வில முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட வெறியை மீண்டும் வெளிப்படுத்த நினைக்கிறார். இது அநாகரிகமாகவும் அசிங்கமாகவும் உள்ளது.

    ReplyDelete
  3. உதயன்கம்பன்விலவை பார்க்கும் போது சிரிப்பதா,அழுவதா என தெரியவில்லை.பாவம் அவுக்ஷ்திரேலியாவில் படித்து பட்டம் பெற்றவர்,ஆனால் இன்னும் உலக அரசியல் ஒழுங்கையும் அதன் அதிகார தாக்கங்களையும் இன்னும் புரியாமல் இருக்கிறார் என்பது வேடிக்கையான விடயம்.இன்னொரு பக்கத்தில் எவ்வளவு பொய்கலை சொல்லி சிங்கள மக்களை தொடர்ந்து முட்டாலாக்க முடியாது என்பதை மஹிந்தவே புரிந்து கொண்டுவிட்டார் ஆனால் இந்த மனிதர் பாவம் பைத்தியம் போல் இனி புலம்ப ஆரம்பித்து விட்டார்.

    ReplyDelete

Powered by Blogger.