July 09, 2019

தமிழர்களின் கோரிக்கையை ஞானசாரரர் முன்னெடுப்பாரானால், எந்த எதிர்ப்பையும் காட்ட மாட்டோம்

தமிழர்கள் தன்னாட்சி அமைப்பதற்கான கோரிக்கையை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், எந்த வித எதிர்ப்பையும் காட்ட மாட்டோம் என வடமாகாண முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த தன்னாட்சியை தமிழர்கள் அமைக்க எமக்கு வழிகோழிய பின்னர், சிங்களவர்கள் ஏனைய பிரதேசங்களை தனிச் சிங்கள தேசமாக மாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் கடந்த 07ஆம் திகதி இடம்பெற்ற பௌத்த மாநாட்டில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சிங்கள ஆட்சி அமைப்போம் தமிழர்கள் கோபிக்க வேண்டாமென கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,

ஞானசாரரின் கருத்தை மறுதலிக்க வேண்டிய தேவை இல்லை. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானிய அரசு ஒப்பந்தம் செய்த போது, இருந்தவன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் என்ற ஒரு கண்டிச் சாமி எனும் தமிழில் கையொப்பமிட்ட ஒரு அரசன். அதனாலே தானோ, அதற்குரிய கருத்தையும், ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எம்மைப் பொறுத்தவரையிலும், எமது அரசியல் நீண்டகாலமாக உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த தாயகம் தொடர்பாகவே இருந்திருக்கின்றது.

தெற்கை சிங்கள தேசம் என்று தான் பேசியிருக்கின்றோம். தெற்கு சிங்கள தேசமாக இருப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவ்வாறு ஞானசார தேரர் குறிப்பிட்ட வகையில் இலங்கை சிங்கள தேசமாக இருக்க வேண்டுமானால் அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால், அவரே எமக்கு இப்போது ஒரு உதவியைச் செய்யலாம். ஒரு சமாதான சூழ்நிலையை உருவாக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.

எங்களுடைய தமிழ் தாயகத்தை இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலமாக இணைந்த எமது பிரதேசத்தை வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்களின் தாயகம் என பேசப்படும் வடக்கு மற்றும் கிழக்கை எங்களுக்குள் ஒரு சுயாதீனமான கூட்டாட்சி, சுயாட்சி இணைப்பை உருவாக்கி இணைந்த இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனி தன்னாட்சியை ஏற்படுத்தி அது எமது தமிழ் மக்களின் பிரதேசமாக இருந்துக் கொண்டு ஏனைய பிரதேசங்களில் சிங்களவர்களாக இருப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்கவில்லை.

அவ்வாறு தான் எமது அரசியலில் இருந்துள்ளது. இலங்கையில் இனப்பிரச்சினைத் தீர்வை எட்டக்கூடிய வாய்ப்பை ஞானசார தேரர் உருவாக்கியுள்ளார் என நினைக்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கில் தன்னாச்சிக்கான பகுதியை விட்டு, ஏனைய பகுதிகளை தெற்கத்திய சிங்கள நாடாக வைத்திருக்கலாம்.

அவ்வாறு வைத்திருப்பதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எமது கோரிக்கைகளை ஞானசார தேரர் முன்னெடுப்பாரானால், எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

14 கருத்துரைகள்:

ஞானசாரயின் விசைப் பேச்சை அதிலுள்ள இனவாத பாரபட்சத்தையும் சிவஞானம் ஐயா விளங்கத் தவறிவிட்டார்

ஞானசாரயின் விசப் பேச்சை அதிலுள்ள இனவாத பாரபட்சத்தையும் சிவஞானம் ஐயா விளங்கத் தவறிவிட்டார்

அது நீங்கள் காணும் கனவு,அப்படி எனில் கடந்த கால யுத்த வேளையில் அவர் உங்களுக்காக பேசி,அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்

விடிய விடிய இராமன் சீதை வரலாறு கதை கேட்டுவிட்டு காலையில் மீண்டும் இராமன் சீதைக்கு யார் என்று
*சீ்,வி,கே, சிவஞானம் கேட்கின்றார் பதில் சொல்லுங்கள்*

சிரிப்பு காட்டாம சும்மா இரு தம்பி...
என்னால முடியல...

சிவஞானம் ஐயா அவர்கள் இவ்வாறான மிகவும் பாரதூரமான கருத்தினை கூறியிருப்பாரா என்பது சந்தேகம். ஒரு கட்சியில் உள்ள தலைவர் என மதிக்கப்படக்கூடிய ஒருவர் இப்படியான கீழ்த்தரமான கருத்தைக் கூறுவதற்கு முன்னர் அவர் தான் சார்ந்த கட்சியின் அனுமதியினைப் பெற்று இருத்தல் வேண்டும். அப்படியிருந்தாலும் ஏனைய ஏழு மாகாணங்களிலும் வாழக்கூடிய தமிழர்களின் நிலைமை என்னாவது. தொடர்ந்து அவர்கள் இனவாதிகளின் அடிமைகளாக வாழ வேண்டியதுதானா? உங்களுக்கு அதிக வயதாகிவிட்டது என்று எண்ணுகிறேன். வாய் மற்றும் நாக்குத் தடுமாற்றங்கள் (Slick of the tongue) அரசியலாளர்களுக்கு இருக்கக்கூடாது. மேலும் ஞானசாரர் என்ன அவ்வளவு பெரிய ஆளா. ஆந்த ஆளுக்கு இனவாதம் பேசி மக்களை முட்டாளாக்கத்தான் முடியும். அந்த முட்டாள்களுல் நீங்களும் ஒரு முட்டாளாக மாறிவிடுவீர்களோ என்ற அச்சம் மக்களுக்கு இல்லாவிட்டாலும் நீங்கள் சார்ந்த கட்சியினருக்கு நிச்சயம் இருக்கும்.

அப்படியானால் மலையகத் தமிழர்களும் வடக்கு கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்களும் எங்கே போவது? நீங்கள் மட்டும் சுயாட்சியை செய்து கொண்டு வாழ வேண்டும் உங்களோடு உடன் பிறந்த மற்றவர்கள் எங்கே போவது?

If 7 provinces are for Singhalese;2 provinces are for Tamils, how many provinces are for Muslims??0- happy??

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான் தமிழர்களுக்கு..!

Diaspora உடன்படிக்கையோ!!!

தமிழ் தலைவர்கள் வெளியிடும் சூசகமான கருத்துக்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஞானசார சிங்கள நாடு என்று ஒரு துரும்பை அடிக்க சிவஞானம் ஐயா, சரி எமது பங்கை எமக்குத் தந்துவிட்டு, உன்னுடையதை நீ எடுத்துக் கொள் என்று தர்க்க ரீதியான துரும்பை அடித்திருக்கின்றார். அவ்வளவுதான். முன்னையது விசர் பிடித்து ஆடுகின்றது என்பது சிவஞானம் ஐயாவுக்குத் தெரியாமல் இருக்காது. இதனை சற்று ஆழமாகச் சிந்தித்து கருத்துக் கூறுபவர்கள் அபிப்பிராயம் வெளியிடுவதே விவேகம்.

ஏன் இலங்கையில் மாத்திரம் இஸ்லாத்தை ஒரு இனமாக நினைக்கின்றார்கள்? இது முற்றிலும் தவறான யோசனை. வேடிக்கையான பகுதி என்னவென்றால் படித்த சமூகமும் இந்த உண்மையை உணரவில்லை. இஸ்லாம் என்பது ஒரு மதம் இது ஒரு இனம் அல்ல. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள் என் அன்பான தமிழ் பேசும் முஸ்லிம்களே. சிங்களவர்களில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் தங்களை "கிறிஸ்தவர்கள்" என்று சொல்லவில்லை அவர்கள் "சிங்களவர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். வேறு எந்த நாட்டிலும் ஒரு மதத்தை இனமாக கூறுவதில்லை இந்த வேடிக்கையானது இலங்கையில் மட்டுமே உள்ளது. முஸ்லீம் தோழர்களே நீங்கள் தமிழர்கள் அதுதான் உங்கள் இனம் ஆனால் இஸ்லாம் உங்கள் மார்க்கம் முட்டாள்தனமான அறிக்கைகளை செய்ய வேண்டாம் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் யுத்தம் நடந்த காலத்தில் சிங்களவல்களிடம் இருந்து தப்புவதற்காக கூறியது எல்லோருக்குமே தெரியுமே அதையே சாக்கா வைத்து நீங்கள் அரசிடம் பெற்றுக் கொண்ட நன்மைகளும் தெரியும் இனியும் ஏன் இந்த நாடகம். ஓத்துக் கொள்ளுங்கள் நீங்களும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள். ஆராபியர்கள் நாட்டில் கூட தங்களை ஓர் இஸ்லாம் இனமாக கூறுவதில்லை அவர்களின் இனம் அராபியர் தயவு செய்து விழித்துக் கொள்ளுங்கள்

Why do they think of Islam as a race only in Sri Lanka? This is a totally wrong idea. The funny part is that even the educated community does not realize this fact. Islam is a religion It is not a race. Please understand this, my dear Tamil-speaking Muslims. There are Christians in the Sinhalese but they do not call themselves "Christians" They say they are "Sinhalese". This fun is only in Sri Lanka where no other religion is a religion. Muslim guys you Tamils ​​That is your race but Islam your religion Don't make stupid statements Realize reality. Everybody knows that you said to escape the Sinhalese during the war, you know the benefits you got from the government with the pretext of why this drama. Remember, you and the Tamil-speaking Islamists. Arabs do not even call themselves an Islam in the country.

இலங்கை இஸ்லாமியர் மத்தியில் சோனகர், மலே, பாய் இப்படி பல இனத்தவர் இருக்கிறார்கள். இவர்களுள் சோனகர் மட்டுமே பல தலை முறைகளாக தமிழ் பேசுகிறார்கள். இனரீதியில் பல பிரிவுகளாக சிதறி விடாமல் இருக்க இஸ்லாம் எங்கள் மதம், நாங்கள் அனைவரும் முஸ்லிம் இனத்தவர் என்று ஒன்று பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் மொழியால் ஒன்றுபடுவது போல இலங்கை இஸ்லாமியர் மதத்தால் ஒன்றுபட்டு உள்ளனர். இது மிகவும் புத்திசாதுரியமான முடிவு. தமிழரின் புத்தக அறிவிலும் பார்க்க இலங்கை முஸ்லிம்களின் பட்டறிவு மகத்தானது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Post a comment