Header Ads



அர­சாங்கம் உத்­த­ர­வா­த­ம­ளித்தால், உணவு நிலை­யத்தை தொட­ரலாம் - முகா­மை­யாளர் சஹாப்தீன்

அடிப்­ப­டை­யற்ற கார­ணங்­களை முன்­வைத்தே எமது இல­வச உணவு வழங்கும் திட்டத்­திற்கு எதி­ராகப் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எங்­க­ளது செயற்­பா­டு­களை மீண்டும் தொடர்­வ­தாக இருந்தால் அர­சாங்கம் எங்­க­ளுக்கு உத்­த­ர­வாதம் அளிக்க வேண்டும் என ‘ஜன­போஷ’ பவுண்­டே­சனின் பொது முகா­மை­யாளர் எம்.ஏ.சஹாப்தீன் தெரி­வித்தார். 

ஜன­போஷ’ பவுண்­டே­ச­னினால் மூன்று பிர­தான வைத்­தி­ய­சா­லை­களை அண்­மித்து நடாத்­தப்­பட்டு வந்த இல­வச உணவு வழங்கும் நிலை­யங்­களில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுப்­ப­தாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டமை மற்றும் அர­சி­யல்­வாதி ஒரு­வரை மேற்­கோள்­காட்டி சிங்­கள பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டமை ஆகிய சம்­ப­வங்­களைத் தொடர்ந்து இந்த திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டது. இந் நிலையில் இத் திட்­டத்தை தொடர்­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­னவா எனக் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஆரம்­பத்தில் இந்த இடத்தில் இடம்­பெறும் செயற்­பா­டு­களை உட­ன­டி­யாக நிறுத்­தும்­படி பேஸ்புக் மூலம் எங்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. நாங்கள் உணவில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுப்­ப­தாக அவர்கள் தெரி­வித்­தார்கள். நான் அவர்­க­ளு­டைய பெயர்­களைக் கூற விரும்­ப­வில்லை.

பின்னர் வைத்­தி­ய­சா­லைக்கு வரும் மக்­க­ளுக்கு உண­வுக்­கான அனு­மதிச் சீட்­டுக்­களை வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் விநி­யோ­கிப்­பதை சிலர் தடுத்­தார்கள். இந்த இரண்டு சம்­ப­வங்­க­ளுக்கும் பின்­னர்தான் மஹ­ர­கம அபேக்சா வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மை­யி­லுள்ள முஸ்லிம் கடை­களை சோதனை செய்­யு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கோரிக்கை விடுத்தார். மக்கள் மத்­தியில் மீண்டும் இந்த கருத்­தடை மாத்­திரை தொடர்­பான பீதி பற்றி பேசத்­தொ­டங்­கி­னார்கள். என்னால் பெயர் குறிப்­பிட முடி­யாத சில குழுக்கள் எங்­க­ளது செயற்­பா­டு­களை நிறுத்திக் கொள்­ளும்­படி கேட்டுக் கொண்­டார்கள். மக்­க­ளுக்கு உணவு வழங்­கு­வதைத் தவிர வேறு ஏதா­வது வகையில் உதவி செய்து கொள்­ளு­மாறு அவர்கள் கோரி­னார்கள்.

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் எங்­க­ளிடம் விசா­ரணை செய்த போது எங்­கி­ருந்து இந்த வேலைத்­திட்­டத்­திற்­கான நிதியைப் பெறு­கி­றீர்கள் என்று கேட்­டார்கள். நாங்கள் எங்­க­ளு­டைய நன்­கொ­டை­யா­ளர்­களின் விப­ரங்கள் அடங்­கிய அறிக்­கை­களை காட்­டினோம். வியா­பாரப் பதிவு தொடர்­பான விப­ரங்கள் , உணவு தயா­ரிப்பு மற்றும் சுகா­தா­ரத்தை உறுதி செய்யும் சான்­றி­தழ்கள் என்­ப­வற்றைக் காட்­டினோம். எங்­க­ளிடம் 40 இற்கும் அதி­க­மான ஊழி­யர்கள் கடமை புரி­கி­றார்கள்.

ஆனால் அவர்கள் அனை­வரும் முஸ்­லிம்கள் அல்லர். எல்லா சம­யத்தைச் சேர்ந்­த­வர்­களும் எங்­க­ளுடன் கடமை புரி­கி­றார்கள்.

உணவு தயார் செய்த பின்னர் முதல் ஆளாக அதில் உப்பு மற்றும் உறைப்பு என்­பன சரி­யாக இருக்­கின்­றதா என்று சுவை பார்ப்­பது நான்தான். பிறகு இங்கு பணி புரியும் நாங்கள் அனை­வரும் அதே உண­வைத்தான் சாப்­பி­டுவோம். எங்­க­ளிடம் கூறப்­பட்ட கார­ணங்கள் அனைத்தும் அடிப்­ப­டை­யற்­றவை. நாங்கள் எங்­க­ளது செயற்­பா­டு­களை தொடர்­வ­தாக இருந்தால் அர­சாங்கம் எங்­க­ளுக்கு உத்­த­ர­வாதம் வேண்டும்.

அடுத்­த­வர்­க­ளு­டைய பசியைப் பற்றி எனக்குத் தெரியும். ஏன் என்றால் எனது சிறு வயதில் நான் அதை உணர்ந்­தி­ருக்­கிறேன். நாங்கள் வழங்கும் உணவினை சாப்பிட்டு விட்டு திருப்தி அடையும் மக்களைப் பார்க்கும் போது வரும் சந்தோஷத்தை வார்த்தைகளில் சொல்லி விட முடியாது. ஆனால் இப்போது எங்களது செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டன. எங்களது உழியர்களுடன் நாங்கள் இனி என்ன செய்யப்போகின்றோம் என்று தெரியவில்லை. என்றார்.

vidivelli

5 comments:

  1. இவனுகள நம்பாதீங்க எல்லாவற்றயும் இவனுகளும் சேர்ந்துதான் (அராஜாங்கம்) எமெக்கெதிராக செயற்படுத்துரானுகள். ரத்ன பிரதமரும் ஜானசார ஜனாதிபதியும் அவர்களின் அல்லக்கைகளான ரணில், மைத்திரி மகிந்த and co யாரையும் நம்பவேண்டாம். நன்மை செய்யவேண்டும் என்றால் வேறு வழிகளைத் தேர்ந்தெடுங்கள்.

    ReplyDelete
  2. நீங்கள் இச்சேவையை அல்லாஹ்வுக்காக மனத்தூய்மையுடன் செய்தீர்களா, அப்படியானால் அதற்கான கூலியை பெற்றுக் கொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  3. Should not resume this service till Gamini lokuge and media responsible apologise publicly.

    ReplyDelete
  4. இந்த சேவயை நிறுத்த காரணம் அக்கம் பக்கத்தில் உள்ள மாற்று மத ஹோட்டல்களுக்கு வியாபாரம் குறைந்து இருக்கும் அதனால் தான் மாற்று வழியில் உதவி செய்ய சொல்கின்றார்கள் இருக்கும்

    ReplyDelete
  5. Please help muslim pour people no need to anymore those who are against us.

    ReplyDelete

Powered by Blogger.