July 05, 2019

முஸ்லிம்களுக்கு மட்டும், ஏன் இந்த பாரபட்சம்...?


நாட்டில் அவ­ச­ர­காலச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அள­வுக்­க­தி­க­மா­ன­வர்கள் ஒன்­று­கூ­டு­வதோ மாநா­டு­களை நடத்­து­வதோ அனு­ம­திக்­கப்­பட முடி­யா­த­தாகும். என்­ற­போ­திலும் பௌத்த இன­வாத சக்­திகள் தாம் விரும்­பி­ய­வாறு கூட்­டங்­களை ஏற்­பாடு செய்­யவும் ஒன்­று­கூ­டல்­களை நடாத்­தவும் பொலிசார் அனு­மதி வழங்­கு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கடந்த காலங்­களில் இவ்­வா­றான கூட்­டங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யதன் விளைவை நாடு கண்­டி­ருக்­கி­றது. அளுத்­க­மவில் முஸ்­லிம்­களின் எதிர்ப்­பையும் அச்­சத்­தையும் கருத்திற் கொள்­ளாது பொதுக் கூட்­ட­மொன்றை நடாத்த பொது பல சேனா­வுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டதன் கார­ண­மா­கவே அங்கு பாரிய அழிவு அரங்­கேற்­றப்­பட்­டது. மூன்று முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­ட­துடன் பல கோடிக் கணக்­கான சொத்­த­ழி­வுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும் இதற்குக் கார­ண­மான ஒருவர் கூட சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை. இன்றும் அவ்­வா­றா­ன­தொரு அழி­வுக்கே கண்­டியில் திட்­ட­மி­டப்­ப­டு­கி­றதா என்ற அச்சம் முஸ்­லிம்கள் மத்­தியில் எழு­வதில் எந்­த­வித ஆச்­ச­ரி­ய­மு­மில்லை.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் அவ­ச­ர­காலச் சட்டம் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. உண்­மையில் இந்த அவ­சர காலச் சட்டம் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ரமே அமுல்­ப­டுத்­தப்­பட்­டது என்று சொல்­வதே மிகப் பொருத்­த­மா­ன­தாகும். முஸ்­லிம்கள் சட்ட ரீதி­யாகப் பதிவு செய்­யப்­பட்ட தமது நிறு­வ­னங்­களின் உள்­ளக சந்­திப்­புக்­களை ஏற்­பாடு செய்­வ­தற்குக் கூட அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்தில் அனு­மதி பெற வேண்­டிய நிலை தொடர்­கின்ற சூழலில், பல்­லா­யிரக் கணக்­கா­னோரை ஒன்று திரட்­டு­கின்ற பௌத்த பிக்­கு­களின் நிகழ்­வு­க­ளுக்கு எந்­த­வித தடை­களும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாமை சட்­டத்­தி­னதும் பாது­காப்புத் தரப்­பி­னதும் பார­பட்­சமே அன்றி வேறில்லை எனலாம்.

இக் காலப்­ப­கு­தி­யி­லேயே குரு­நாகல், மினு­வாங்­கொடை போன்ற பகு­தி­க­ளிலும் பட்­டப்­ப­க­லி­லேயே வன்­மு­றை­களை அரங்­கேற்­றி­னார்கள். கொட்­டா­ர­முல்­லையில் வீடு புகுந்து முஸ்லிம் வர்த்­த­கரை வெட்டிக் கொன்­றார்கள். இதன்­போ­தெல்லாம் படை­யினர் தமது துப்­பாக்­கி­களைப் பிர­யோ­கிக்­க­வில்லை. மாறாக உத்­த­ரவை மீறி வாக­னத்தை நிறுத்­தாது வேக­மாகச் சென்ற அப்­பாவி சார­தியும் சுக­வீ­ன­முற்ற தனது மகளைப் பார்ப்­ப­தற்­காக பாட­சா­லை­யினுள் நுழைய முயன்ற அப்­பா­வித தந்­தையின் மீதுமே அவ­ச­ர­காலச் சட்டம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வாசல் ஒன்றைத் தாக்­கு­கின்ற போது அதனை படை­யினர் கைகட்டி வேடிக்கை பார்த்த வீடியோ காட்­சியை முழு உல­கமும் பார்­வை­யிட்­டது.

அதே­போன்­றுதான் கண்­டியில் அது­ர­லியே ரத்ன தேரர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்த போதும் அவ­ருக்கு ஆத­ர­வாக ஆயிரக் கணக்­கானோர் அவ்­வி­டத்தில் சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்­று­கூ­டி­ய­போதும் சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை. இந்த உண்­ணா­வி­ரத போராட்ட இடத்­தி­லி­ருந்து ஞான­சார தேரர் தலை­மையில் கொழும்பை நோக்கி பேரணி ஆரம்­பித்த போதும் நாடெங்கும் சந்திகளில் இனவாதிகள் ஒன்றுகூடிய போதும் அதனைத் தடுத்து நிறுத்த சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை. அதற்குப் பதி­லாக முஸ்லிம் அமைச்­சர்கள் தமது பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்ய வேண்­டிய துர­திஷ்ட நிலை ஏற்­பட்­டது. இங்கு சட்டம் தனது கட­மையைச் செய்­தி­ருந்தால் முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி துறக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ராது. சர்­வ­தே­சத்தின் முன் இலங்கை தலை­கு­னிந்து நிற்க வேண்­டியும் வந்­தி­ராது.

இவ்­வா­றான சூழ­லில்தான் நாளை மறு­தினம் கண்­டியில் மீண்டும் பாரிய மாநாடு ஒன்­றுக்கு அழைப்­பு­வி­டுக்­கப்­பட்­டுள்­ளது. 10 ஆயிரம் பௌத்த பிக்­கு­களும் 1 இலட்சம் பொது மக்­களும் இதில் பங்­கேற்­க­வுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­துள்­ளனர். இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை பொலிசார் இதனைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை.

முஸ்லிம் அமைச்­சர்­களும் எம்.பி.க்களும் ஜனா­தி­பதி, பிர­தமர், பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ஆகி­யோ­ரிடம் நேரில் முறை­யிட்டும் சாத­க­மான பதில்கள் கிடைக்கப் பெற­வில்லை. மாறாக முஸ்லிம்களே அச்சத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள். உலமா சபை வேறு வழியின்றி நோன்பு நோற்றுப் பிரார்த்தியுங்கள் என்று அறிக்கை விடுத்திருக்கிறது.

ஆக இலங்கை முஸ்லிம்கள் மீது சட்டம் பாரபட்சமாகவே பிரயோகிக்கப்படுகிறது என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன. நேற்றைய தினம் மனித உரிமை கண்காணிப்பகம் காட்டமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளபோதிலும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கப் போகிறது. vidivelli 

1 கருத்துரைகள்:

So this government kooli government of all terrorist monk. Muslim politician and ACJU must going to inform all foreign High commission and international human rights organisations. All Sri Lankan Muslim asked Dua to our RAB. ALLAH must protect us from whole enemies.

Post a comment