July 09, 2019

தமிழர்கள் தமது காணிகளை, முஸ்லிம்களுக்கு விற்கக்கூடாது எனக்கூறுவது இனவாதத்தின் உச்சம் - விக்னேஸ்வரனுக்கு தக்க பதிலடி

உயர் நீதிமன்ற ஓய்வு நிலை நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயா போன்ற படித்த பண்பாளரான  ஒருவர் கேவலமான அரசியல் பிழைப்புக்காக பாவிகளை போல இனவாதம் பேசி அப்பாவி மக்களை உசுப்பேற்றுவது பேரதிர்ச்சி தருகின்றது என்று கிழக்கு மாகாண சபை  முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலாளர்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை சந்தித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க கூடாது, குறிப்பாக தமிழர்களின் காணிகள் முஸ்லிம்களுக்கு விற்கப்பட கூடாது என்பதாக விக்னேஸ்வரன் ஐயா தமிழ் சமூகத்துக்கு விடுத்து உள்ள விண்ணப்பத்தை பத்திரிகையில் நான் படித்தேன். இது அப்பட்டமாக இனவாதத்தின் உச்சத்தை தொட்டுள்ள கருத்து நிலைப்பாடு ஆகும்.

ஏனென்றால் எவருக்கும் எங்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காணிகளை விற்று வாங்குவது சட்ட ரீதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையாக இருத்தல் வேண்டுமே ஒழிய இதில் இனவாதத்தை புகுத்துவது அழகோ, முறையோ அல்ல. அரசியலை, அழுத்தத்தை, வன்முறையை பிரயோகித்து காணிகள் எந்த தரப்பினராலும், எந்த வகையிலும் கைப்பற்றப்படவோ, கையகப்படுத்தப்படவோ கூடாது என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து கிடையாது என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனால் உடுத்த உடுப்போடு 24 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஒரேயடியாக வெளியேற்றப்பட்ட வரலாற்று துயரத்தில் இருந்து நாம் இன்னும் மீண்டு விடவில்லை.

இந்நிலையில் விக்னேஸ்வரன் ஐயா போன்றவர்களின் இவ்வாறான கருத்துக்கள் தமிழ் இளைஞர்களை மீண்டும் தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் என்று அஞ்ச வேண்டியுள்ளது. அத்துடன் இவ்வாறான கருத்துகள் தமிழ் பேசும் மக்களை நிரந்தரமாக பிரித்து வைப்பனவாக உள்ளன. அரசியல் பிழைப்புகளுக்காக முன்வைக்கப்படுகின்ற பிழையான கருத்துகளால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுவதே காலம் காலமாக தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் நீடித்த சக வாழ்வுக்கு சங்கடம் கொடுப்பதாகவும் உள்ளது.

3 கருத்துரைகள்:

விக்கி சொல்வது இனவாதம் இல்லை. ஒரு அப்பாவி மக்களுக்கான ஒரு எச்சரிக்கை மட்டுமே.

கல்முனையில் நீங்கள் செய்யும் அநியாங்கள் மற்றய ஊர்களிலும் நடக்காமல் தடுப்பது, நாட்டின் அமைதிக்கு வழிவகுக்கும் தானே

We do not worry about the quote of the retired Justice. Now, he is handicapped in politics. Somehow he has to pickup people. His narrow mind says racism is the best thing to adhere people in his politics. Sometimes, he forgets nothern people are wise and well educated.

1. வடபகுதி முஸ்லிம்கள் குறிப்பாக தங்கள் காணிகளை தமிழருக்கு விற்க்க கூடாது என 2000 ஆண்டு போர் நிறுத்தத்தின் போதிருந்தே சொல்லி வருகிறேன். ஏற்கனவே விற்கப்பட்ட காணிகளும் திரும்ப முஸ்லிம்களுக்கு கைமாறா வேண்டும் என்பது என் வாதம். திரு விக்னேஸ்வரன் முதல் அமைச்சராக இருந்தபோதும் நான் இதனை வலியுறுத்திவந்துள்ளேன். அந்த சமயத்தில் வடபகுதி முஸ்லிம் அகதிகளின் நிலங்களை தமிழர் வாங்குவதன் அநீதித்தன்மைபற்றி பற்றி திரு விக்னேஸ்வரன் ஐயா நடவடிக்கை எடுக்கவில்லை. அதுமட்டுமன்றி முஸ்லிம்பகுதிகளில் வாங்கிய நிலத்தில் முஸ்லிம்களின் குடியிருப்பின் மத்தியில் தமிழ் பணக்காரர் உல்லாட விடுதி போன்றவற்றை அமைக்கவும் அனுமதித்திருக்கிறார். நிலசந்தை இனரீதியாக இருக்க வேண்டுமென்று சொல்கிற விக்க்னேஸ்வரன் ஐயா இதனை ஏன் அனுமதித்தார்? இதுதான் என் கேழ்வி. 2. மற்றப்படி முஸ்லிம்களுக்கு நிலம் விற்க்காதே என தமிழர் சொல்வதும் தமிழருக்கு நிலம் விற்காதே என முஸ்லிம்கள் சொல்வதும் புதியவை அல்ல. இவற்றின் உச்சமாகத்தான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு நிலம் இல்லையென்னும் திரு விக்னேஸ்வரன் ஐயா போன்ற தமிழ் வீரர்களையும் தமிழருக்கு இடம் இல்லையென்னும் கல்முனையில் முஸ்லிம் வீராரகளையும் பார்க்கிறேன்.

Post a comment