Header Ads



சஹ்ரானின் மனைவி வீசி, எறிந்த தொலைபேசி கண்டெடுப்பு

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் திட்­ட­மிட்டு நடத்­திய அடிப்­ப­டை­வாத குழுவின் தலை­வ­ரான சஹ்­ரானின் மனை­வி­யினால் வீசி­யெ­றிந்­த­தாகக் கூறப்­படும் கைய­டக்கத் தொலை­பே­சியின் சில பகு­திகள் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படைப் பிரி­வி­னரால் திவு­லப்­பிட்­டிய – மீரி­கமை வீதியின் ஹல்பே குருல்­ல­கம, உலு­கடை சந்­திக்கு அருகில் வயல் வெளியில் மேற்­கொள்­ளப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­களின் போது கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

சஹ்­ரானின் மனைவி, இந்த பாதை­யி­னூ­டாக பய­ணித்த போது கைய­டக்கத் தொலை­பே­சியை உடைத்து இந்த வெளியில் வீசி­யெ­றிந்­த­தாக இர­க­சிய பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தி­னை­ய­டுத்து பொலி­ஸாரும், பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­படை பிரி­வி­னரும் அப்­ப­கு­தியில் புற்­களை வெட்டி தேடு­தல்­களை மேற்­கொண்ட போதே குறிப்­பிட்ட கைய­டக்கத் தொலை­பே­சியின் பகு­திகள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இர­க­சியப் பொலி­ஸாரின் தடுப்­புக்­கா­வலின் கீழ் இருந்­து­வரும் சஹ்­ரானின் மனைவி இந்தப் பகு­திக்கு அழைத்து வரப்­பட்­ட­தா­கவும், அவர் இனங்­காட்­டிய குறித்த பகு­தியில் தேடுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தா­கவும், அச்­சந்­தர்­ப்பத்­திலே கைய­டக்கத் தொலை­பே­சியின் பகு­திகள் என சந்­தே­கிக்­கப்­படும் சில­வற்றை கடந்த 30 ஆம் திகதி மாலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு மீரி­கம பொலி­ஸாரும், பிர­தே­சத்தின் பொது மக்­களும் ஒத்­து­ழைப்பு வழங்­கினர்.

முகத்தை மறைத்து ஆடை அணிந்த முஸ்லிம் பெண்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி மீரி­கம, ஹந்­தா­முல்ல பகு­தி­யி­லுள்ள ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் சிங்­களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை கொள்­வ­னவு செய்­தி­ருந்­தனர்.

இதே­வேளை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது சுனாமி குடியேற்ற கிரா­மத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து பலி­யான வீட்டில் இருந்து கண்­டு­பி­டிக்­கப்­பட்ட ஆடை கொள்­வ­னவு செய்­யப்­பட்ட கடையின் விப­ரங்கள் தொடர்­பாக நடாத்­தப்­பட்ட விசா­ர­ணை­களின் போது இந்த விப­ரங்கள் வெளி­வந்­தன.

அவ்­வி­டத்தில் சஹ்ரானின் மனைவி காயங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சி.ஐ.டி.யின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

No comments

Powered by Blogger.