Header Ads



முஸ்லிம் வாக்குகள் இல்லாமல், எவராலும் ஜனாதிபதியாக முடியாதா...?

- Mano Ganesan -

"முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது" என்று இங்கே மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா கூறுகிறாரே, இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என என்னை வழிமறித்து கேட்டார்கள்.

"சில விஷயங்களை பகிரங்கமாக பேசி ரகசியமாக செய்ய வேண்டும். சில விஷயங்களை ரகசியமாக பேசி பகிரங்கமாக செய்ய வேண்டும். அவை எவை என்ன என்பவற்றை சரியாக தீர்மானிப்பவனே பொறுப்புள்ள அரசியல்வாதி. இலங்கை போன்ற ஒரு பல்லின நாட்டில், சுய பிரபல்யத்திற்காக நாவடக்கமின்றி பேசுவோர் தமது இனத்தை ஆபத்தில் தள்ளுகிறார்கள்" என்று நான் பொதுப்படையாக பதில் சொன்னேன்.

வேறு என்னத்த சொல்ல...? ஏற்கனவே இல்லாத பொய்களை எல்லாம் சோடித்து சாமானிய முஸ்லிம் மக்களை, "சந்தேக வலய" த்தில் "அவன்கள்" வைத்திருக்கிறான்கள். இதில் இது வேறயா..!

5 comments:

  1. சரியான கருத்து திரு.மனோ அவர்களிடம் இருந்து.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  3. மனோ ஐயா அவர்களே! எவர் ஒப்புக் கொண்டாலும் சரி அல்லவென்றாலும் சரி. நீங்களும் சம்பந்தர் ஐயா அவர்களும் சேர்ந்ததுதான் முஸ்லிம் சமூகம். ஐந்து விரல்களும் ஒன்றல்ல. நலிவடைந்த சமூகத்திற்காகவும் நலிவடையச்செய்யப்பட்ட சமூகத்திற்காகவும் போராடுபவனே அரசியலாளன்.

    ReplyDelete
  4. Hats off to you Hon.Minister

    ReplyDelete

Powered by Blogger.